Archives
August 2026
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
காட்பாடி காங்கேயநல்லூர் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி: கண்டுகொள்ளாத வேலூர் மாநகராட்சி நிர்வாகம்!வேலூர், ஜூன் 15-வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி காங்கேயநல்லூர் ரோடு, அவ்வையார் தெருவில் மழைநீர் வடிய வழியின்றி சில தெருக்களில் குளம் போல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்ல கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாகஇப்பகுதியில் உள்ள கற்பக விநாயகர் கோவில் எதிரே நேற்றுமுன்தினம் இரவு பெய்த கன மழையினால் மழை நீர் குளம் போல் அங்கே தேங்கியுள்ளது. மழைநீர் தங்குதடையின்றி செல்ல வடிகால் வசதி இல்லாத நிலை இங்கு உள்ளது. பொதுமக்கள் படும் பாட்டை காட்பாடி எம் எல் ஏ மருத்துவர் என்ற போதிலும் கண்டும் காணாமல் அலட்சியமாக நடந்து கொள்கிறார். வேலூர் மாநகராட்சி நிர்வாகமும் எம்எல்ஏ வுக்கு ஒரு படி மேலே செயல்படுகிறது. இப்படி போட்டி போட்டு கொண்டு மக்கள் பணியை செய்யாமல் தான் தோன்றித் தனமாக மாநகராட்சி நிர்வாகமும், தொகுதி எம்எல்ஏவும் செயல் படுவது ஏற்புடையதாக இல்லை.இப்படி ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு வைக்கிறார் எம் எல் ஏ மருத்துவர் சுதாகர் என்று சொன்னால் அதுதான் நிதர்சனம்.இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.எனவே, வேலூர் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு ஔவையார் தெருவில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முறையான வடிகால் வசதியை அமைத்து பொதுமக்கள் நிம்மதியாக வாழ வழி வகை செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காணும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் சி ஐ டி யுபொது தொழிலாளர்சங்கத்தின் நிர்வாகிகள்தோழர்பாஷாஹபிபுல்லாமுகமது அலி ஜின்னாசானவாஸ்ஆகியோர் குன்னூர் ரயில் நிலையத்தில் சந்தித்து மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேம்பாடு சம்பந்தமாகவும் கூடுதல் ரயில் கோரியும் ஏற்கனவே நமது கோரிக்கையின் அடிப்படையில் ரயில்வே நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் கோவை மெமோ ரயில் கூடுதல் பெட்டிகள் இணைக்க கோரியும் காட்டூர் ரயில்வே கேட் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றி தெரிவித்தும் தொடர்ந்து அப்பகுதி போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் சென்று வர வழிவகை செய்யவும் நமது குழு தோழர்கள் மூலமாக கோரிக்கை வைத்ததுடன் நேரிலும் எடுத்துப் கூறினோம் தமிழ் தெரியாத பொது மேலாளர் அவர்கள் மொழி பெயர்ப்பாளர் ஒருவரை வரச் சொல்லி நாம் கூறிய கருத்துக்களை பொறுமையாக செவியேற்றதுடன் மேட்டுப்பாளையம் என்றதும் காட்டூர் ரயில்வே கேட் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததா என்று கேட்டார் நாமும் நன்றி கூறினோம் மொழிபெயர்ப்பாளரிடம் நமது கோரிக்கைகளை கேட்டு அறிந்து நமது கோரிக்கைகளை பதிவு செய்ய சொன்னதுடன் உடனடியாக தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கவும் கூறி அறிவுறுத்தினார் நமது கோரிக்கைகளை செவிமடுத்த தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் மனம் நிறைந்த நன்றியினை தெரிவித்தனர்
அரசு இ-சேவை மைய உரிமையாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்
மாணவிகள் திருநீர் அணிந்து வர அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தடை விதிப்பு: முதல்வர் ஜோசப் விஜய் .போட்ட மறைமுக உத்தரவா ?வேலூர்,ஜூன் 14-வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பல வருடமாக இயங்கி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பேரணாம்பட்டு சிவராஜ் நகர் (போன்மில்) பகுதியைச் சேர்ந்த சிவ.வி.கோபி-வித்யா தம்பதியரின் மகளான நர்த்தனா என்ற மாணவி 6ம் வகுப்பு படித்து வருகிறார் .அவர் நெற்றியில் திருநீர் அணிந்து கொண்டு பள்ளி சென்றுள்ளார். அதை பார்த்த அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் லில்லியும், ஆசிரியர் தீபாவும் மாணவி நர்த்தனாவை அழைத்து ஏன் நெற்றியில் திருநீர் அணிந்து வந்தாய் என்று கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். அத்துடன் நிற்காமல் மாணவியிடம் திருநீரை அழித்துக் கொண்டு வா என்று மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வை மாணவி.நர்த்தனா. தனது பெற்றோரிடம் கூறினார். மறுதினம் வழக்கம் போல மாணவி நர்த்தனா பள்ளிக்குச் சென்றார். அப்பொழுது பள்ளியில் பிரேயர் கூட்டம் நடந்து கொண்டுள்ளது. அப்போது மாணவி நர்த்தனா. நெற்றியில் இருந்த திருநீரை கவனித்த ஆசிரியை தீபா நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு முன்பு நர்த்தனாவின் பெயரை கூறி அழைத்து உன் நெற்றியில் உள்ள திருநீரை அழித்துக் கொண்டு பள்ளி அறைக்குள் செல் என்று கூறியுள்ளார். இதனால் மிகவும் மனம் வருந்திய மாணவி நர்த்தனா தனது நெற்றியில் இருந்த திருநீரை அழித்து விட்டு பள்ளி அறைக்குள் சென்றுள்ளார். இது குறித்தும் மாணவி.நர்த்தனா தனது பெற்றோரிடம் அழுதவாறு கூறியுள்ளார். இது குறித்து ஆவேசமடைந்த மாணவி நர்த்தனாவின் தந்தை கோபி மேற்கண்ட இரண்டு ஆசிரியர்களிடமும் நேரில் சென்று மாணவிகள் திருநீர் அணிந்து வராமல் வாருங்கள் என்றும் கூறியிருக்கிறீர்களாமே என்று கேட்டுள்ளார். அதற்கும் மேற்கண்ட ஆசிரியர்கள் நாங்கள் அப்படித்தான் சொல்லுவோம். உங்களால் ஆனதை பாருங்கள் என்றும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடம் புகார் செய்யுங்கள். நீங்கள் எங்கு சென்று புகார் கொடுத்தாலும் நாங்கள் ஒரு கை பார்த்து கொள்கிறோம் என்று திமிராக தெனாவெட்டாக பதில் பேசியுள்ளனர். முதலமைச்சர். விஜய் 1992 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான கிட்டத்தட்ட 2026 ஆம் ஆண்டு வரை பத்திரிகைகளிலும், சினிமாவிலும் தனது பெயரை விஜய் என்றுதான் தெரியப்படுத்தி வந்தார். விஜய் முதலமைச்சர் ஆனதுமே தனது பெயரை ஜோசப் விஜய் என்று தெரியப்படுத்தினார். இதை கண்டு தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தனது பெயரை ஜோசப் விஜய் என அறிவித்ததில் பல மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை பேரணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்துள்ள சம்பவத்திற்கு முதலமைச்சர் . ஜோசப் விஜய் மறைமுக உத்தரவு ஏதேனும் அரசு அலுவலகங்களுக்கு பிறப்பித்துள்ளாரா? என்பது சிதம்பர ரகசியமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வாணியம்பாடி அருகே 75 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் வாழும் கிராம மக்கள்; முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!
காட்பாடியில் போலீசார் ‘வாக் பேட்ரோல்’ தீவிர ரோந்துப் பணி!வேலூர், ஜூன் 14-பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காட்பாடியில் போலீசார் தீவிர ‘வாக் பேட்ரோல்’ (நடை ரோந்து) பணியில் ஈடுபட்டனர்.வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமனின் அறிவுறுத்தலின்படி, காட்பாடி காவல் ஆய்வாளர் தயாளன் தலைமையில், போலீசார் இந்த தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.காட்பாடி வள்ளிமலை கூட்டுச் சாலையில் தொடங்கி குடியாத்தம் சாலை வரை போலீசார் நடந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் இந்த தீவிர நடை ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
‘எந்த ஒரு நிலங்களையும் அடக்கு முறையில் பிடுங்க கூடாது’செய்யாறில் பாதிக்கப்பட்டுள்ள மேல்மா கிராம விவசாயிகளிடம்பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு!செய்யாறு, ஜூன் 14 -‘எந்த ஒரு நிலத்தையும் அடக்கு முறையில் பிடுங்க கூடாது’ என செய்யாறு சிப்காட் விரிவாக்க பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள’மேல்மா கிராமத்து’ விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தபோது, பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆவேசமாக பேசினார்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அடுத்துள்ளது மாங்கால் கூட்டுரோடு. இங்கு கடந்த 2006ம் ஆண்டு 2,400 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா துவங்கப்பட்டது. இங்கு தற்பொழுது 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்பூங்காவின் விரிவாக்கத்திற்காக காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையான மேல்மா மற்றும் சுற்றியுள்ள 10 கிராமங்களில் 2000 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்துவதாக நான்கு ஆண்டுகளாக அதிகாரிகள் – விவசாயிகளிடம் மல்லுக்கட்டி வருகின்றனர்.நில உரிமையாளர்களின் எதிர்ப்பை மீறி, இந்த விவசாய நிலங்களையும், அதிகாரிகள் தேர்வு செய்து அளந்தெடுத்து விட்டனர். சில விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் இழப்பீட்டுத் தொகையையும் அரசு செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.எங்களது நிலத்தை தொழிற்பூங்காவுக்கு கொடுக்க மாட்டோம் என, விவசாயிகள் பிடிவாதமாக இருந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசின் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க், நில எடுப்பு அதிகாரிகள், செய்யாறு, வெம்பாக்கம் தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மேல்மா மற்றும் சுற்றியுள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கலந்தாலோசித்தனர்.அப்பொழுது மேற்கண்ட கோரிக்கைகளை விவசாயிகள் அமைச்சர் மற்றும் கலெக்டரிடம் முன் வைத்தனர். இந்த கோரிக்கைகளை முழுமையாக கேட்ட பின்பு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விவசாயிகளிடம் கூறியதாவது; ‘தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிக முக்கியமானது என்று கருதப்பட்டாலும், தமிழக முதல்வர் விஜய் விவசாயிகள் பக்கம் தான் இருப்பார். ‘எந்த ஒரு நிலமும் அடக்கு முறையில் பிடுங்க கூடாது’. சிப்காட் தொழில் பூங்காவிற்காக நிலம் கையகப்படுத்துவது குறித்து ‘உண்மை – தன்மை’ அறியும் வகையில் கமிட்டி ஒன்று அமைக்கப்படும். தற்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதியதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர், அதிகாரிகளை நம்புங்கள். நானும் மாதம் ஒரு முறை உங்களை வந்து சந்திப்பேன் உங்களது விவசாய நிலங்களை சிப்காட் விரிவாக்கத்திற்கு தாராவார்க்கவிடமாட்டேன். உங்களது கோரிக்கைகளை முதல்வர் விஜய்யிடம் பேசி உங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொடுக்கிறேன். திருவண்ணா மலையின் கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் எளிமையான இவரும் அருள் ஆறுமுகமும் உங்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்; ‘இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விவசாயிகளிடம் பேசினார்.இந்நிகழ்ச்சியில் அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட த.வெ.க.,வின் ஒன்றிய செயலாளர்களான தினேஷ்குமார், சேதுபதி, சிவ விநாயகம், குமரேசன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என, பலரும் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில்திறன் அடிப்படையில் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு :பழங்குடியின மக்களுக்குகலெக்டர் சினேகா அழைப்பு !காஞ்சிபுரம், ஜூன் 14 -தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ( தாட்கோ ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சியுடன் வேலைவாய்ப்பும் வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் பயன் பெற வேண்டுமென கலெக்டர் சினேகா அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ( தாட்கோ ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ, மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு,கம்ப்யூட்டர், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள், பி.இ., மெக்கானிக்கல் பொறியியல், மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும், மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ, 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள் மட்டும் வழங்கப்படும்.மேலும் பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் பயிற்சி நடைபெற உள்ளது. தகுதிபெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டங்களில் தங்கி படிப்பதாற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் வழங்கப்படும். அந்நிறுவனத்தின் மூலமாக ஆரம்ப கால மாத ஊதியமாக சுமார் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான ( www.tahdco.com ) என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்; ‘இவ்வாறு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலூர் பள்ளிகொண்டா ஆதி வராஹி கோயிலில் கைத்தறி துறை அமைச்சர் தரிசனம்!வேலூர், ஜூன் 14-தமிழக அரசின் கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி உலகிலேயே மிகப்பெரிய வாராஹி கோயில் வேலூர் பள்ளிகொண்டா த்ரீஸ்தலம் ஆதி வாராஹி ஷேத்திரத்துக்கு வந்து வாராஹி தரிசனம் செய்து யாகரிஷி வராஹ குருஜியிடம் ஆசிகள் பெற்றார். அமைச்சருடன் தவெக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மரு.சுதாகர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன், கீ .வ .குப்பம் சட்டமன்ற உறுப்பினர் தென்றல் குமார், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் சிந்து மற்றும் பக்தர்கள் உடன் இருந்தனர்.
நில உரிமையாளரிடம் முறையாக அனுமதி பெறாமல் இசைஞானி இளையராஜாவின் இசை ராஜாங்கம் இன்னிசை நிகழ்ச்சி நடத்தும் உரிமையாளர் மீது பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார்!வேலூர், ஜூன் 13-வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அணைக்கட்டு தாலுக்கா, கந்தனேரி ஊராட்சியில் சுமார் 15 ஏக்கர் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து இசைஞானி இளையராஜாவின் இசை ராஜாங்கம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்த இடத்திற்கு பஞ்சமி நில உரிமையாளரிடம் முறையாக எவ்விதமான அனுமதியையும் பெறாமலும், விளைநிலங்களை சேதப்படுத்தியும், நிலத்தை ஆக்கிரமித்து நடைபெற இருந்த நிகழ்ச்சியை நிறுத்தி வைக்குமாறு அந்தப் பகுதி தலித் சமுதாய பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். அந்தப் புகாரின் பேரில் பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் அணைக்கட்டு வட்டாட்சியர் ஆகியோர் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற இருந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த நிலம் தலித் மக்களின் நிலம் என்றும், அவர்களிடம் முறையாக முன் அனுமதியும் பெற்ற பிறகு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அந்த நிலம் அரசு நிலமும் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் நில உரிமையாளர்களிடம் முறையாக முன் அனுமதி பெற்ற பிறகே நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் பள்ளிகொண்டா ஆய்வாளருக்கு, அணைக்கட்டு வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இன்னிசை ராஜாங்கம் கச்சேரி நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கான கட்டமைப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் இந்த இசை நிகழ்ச்சி என்று நடைபெறும் என்று ரசிகர்கள் மற்றும் டிக்கெட் முன்பதிவு செய்து ள்ள பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் இந்த இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும் என்கின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். எது எப்படி போனாலும் ரசிகர்கள் ஏமாற்றம் இன்றி நிகழ்ச்சியை கண்டுகளிக்க வழிவகை செய்தால் சரி என்கின்றனர் சமூக ஆர்வலர்களும் நடுநிலையாளர்களும். இளையராஜா இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறுமா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
1
…
25
26
27
…
128
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.