அரியலூர் மாவட்டத்தில் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் வினாடி வினா போட்டி நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் – 149.அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் தேர்தல் எழுத்தறிவு மன்றம் (ELC) மூலமாக மாணாக்கர்களுக்கு முதல் கட்டமாக கட்டுரை மற்றும் வினாடி வினா போட்டிகள் 02.11.2026 முதல் 07.11.2026 வரை நடத்தப்பட்டு, ஒவ்வொரு பள்ளி/கல்லூரிகளில் 2 மாணாக்கர்கள் வீதம் தேர்தெடுக்கப்பட்ட மாணக்கர்களுக்கு 12.11.2026 இன்று காலை 11.00 மணிக்கு இரண்டாம் கட்டமாக கட்டுரை மற்றும் வினாடி வினா போட்டிகள் அரியலூர் மாவட்ட ஆட்சியரக பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் கூட்டரங்கில், அரியலூர் வாக்காளர் பதிவு அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரியலூர் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர் உடனிருந்தார்கள்.