அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 149-அரியலூர் மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவருமான ந.மிருணாளினி வெளியிட்டார்.

அரியலூர் மாவட்டத்திற்கான SSR-2027 வரைவு வாக்காளர் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்ட வருவாய் அலுவலர் (DRO), நேர்முக உதவியாளர் (பொது), வாக்காளர் பதிவு அலுவலர்கள் (EROs) மற்றும் பிற அதிகாரிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியரால் 12.11.2026 இன்று வெளியிடப்பட்டது.மேலும் அரியலூர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் 5,29,528 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.