நெல் கொள்முதலில் விவசாயிகளுக்கு ரூபாய் 1000 வரை விலை இழப்பு: 20 நாட்களாக நெல் தேக்கம்!

வேலூர், நவ. 5-
RNR நெல் கொள்முதலில் விவசாயிகளுக்கு ரூ.1,000 வரை விலை இழப்பு..? 20 நாட்களாக நெல் தேக்கம் – விவசாயிகள் வேதனை!
2023 அக்டோபர் 15-ஆம் தேதி தொடர்பான தகவலின்படி, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாமல் சுமார் 20 நாட்கள் வரை ஆர்.என்.ஆர். நெல் புரோக்கர்களின் ஆணைக்கிணங்க நெல்களை தேக்கி வைத்ததாகவும், பின்னர் கடந்த 14 10 2026 அன்று நிர்ணயிக்கப்பட்ட விலையில் சுமார் ரூ.1,000 வரை 04.11.2026 இன்று குறைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இத்தகைய செயல்பாடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இதற்குப் பின்னணியில் வேளாண் துறை ஒருங்கிணைந்த மாநில அளவிலான உயர் பதவி ஊழியர் கமிஷனர் மற்றும் நெல் கொள்முதல் தொடர்பான புரோக்கர்கள் இடையே திட்டமிட்ட செயல்பாடுகள் உள்ளதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
விவசாயிகளின் உழைப்புக்கும் விளைபொருளுக்கும் உரிய விலை கிடைக்க அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.