இரும்புலிக்குறிச்சியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சிஅரசு மேல்நிலைப்பள்ளியில் காவல் துறை சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு இரும்புலிக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் கண்ணகி கலந்து கொண்டு போதை பொருளினால் ஏற்படும் தீங்குகளையும், சமூக சீர்கேடுகள் குறித்தும் மாணவ, மாணவிகள் இடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பாதாகையை கையில் ஏந்தியாவரு முழக்கமிட்டு பேரணியில் சென்றனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், காவல்துறைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் :செந்தமிழன் அரியலூர்