செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளியில் ரெட்கிராஸ் பேரியக்கத்தின் நிறுவனரின் 117வது நினைவு தினம் அனுசரிப்பு !

செய்யாறு, நவ. 1 –
செய்யாறு இந்தோ அமெரிக்கன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில்
ரெட்கிராஸ் பேரியக்கத்தின் நிறுவனர் ஜூன் ஹென்றி டுணான்டின் 117வது நினைவு தினம் பள்ளியின் முதல்வர் சையத் அப்துல் இலியாஸ் தலைமையில் நடந்தது.
செய்யாறு வட்ட ரெட்கிராஸ் செயலாளர் க.கோவேந்தன் முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ரெட்கிராஸ் நிறுவனத் தலைவரின் திருவுருவப் படத்திற்கு அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஜூனியர் ரெட்கிராஸ் ஆலோசகர்களான ஜெயந்தி, அஞ்சுகம் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர்கள். அனிதா, பாலா, நிவேதா, திவ்யா, சரண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.