வேலூர்,அக்.31-
வேலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சலவன்பேட்டை வார்டு 39, வேலூர் மாநகராட்சி 3வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் ராமசாமி தேசிங் தெருவில் பல இடங்களில் சாலையின் நடுவில் பள்ளமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகிறார்கள். இதனால் பலர் படுகாயம் அடைந்த வண்ணம் உள்ளனர். இதனால் போர்க்கால அடிப்படையில் இந்த பழுதடைந்த சாலையை சீரமைத்து புதிய சாலை அமைத்து தருமாறு எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று எம்எல்ஏ இந்த பகுதியில் சாலை அமைத்து தருவதாக உறுதியளித்தார். இந்த நிகழ்வின்போது எம்எல்ஏவுடன் வேலூர் மாநகராட்சி 3வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார், உதவி பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.










Leave a Reply