அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி, மேல்மொணவூர் அரசு மாணவர் விடுதியில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

வேலூர், அக்.25-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, மேல்மொணவூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், நேரில் சென்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது மாணவர்கள் அங்கிருந்த நிறை குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் விரிவாக விளக்கிக் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.