அணைக்கட்டு பட்டாசு ஆலை வெடி விபத்து: பலத்த காயமடைந்த பெண்ணுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து காசோலை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

வேலூர், அக்.24-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சங்கீதாவின் குடும்பத்தினரிடம், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்த நிதியுதவியின்படி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ், ( 22.10.2026 ) வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு. து. சுரேஷ், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர். விஜய் சந்திரன், அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் முத்துசித்ரா, துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.