ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்

ஜெயங்கொண்டம் அருகே 3 வது வார்டு பொதுமக்கள் சேரும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்கவும், குப்பைகளை அகற்ற கோரி நகராட்சி அலுவலகத்தை வழி மறித்து முற்றுகை போராட்டம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 3 வது வார்டு பொதுமக்கள் பயன்படுத்த கூடிய கொம்மேடு சொல்லும் சாலையில் தனிநபர் சார்பாக வயல்களுக்கு மண் அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டிராக்டரில் அதிகப்படியாக மண் ஏற்றி சென்றதால் அதிலுள்ள மண் கொட்டியதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இரவு பெய்த மழையின் காரணமாக சாலையில் கிடந்த மண் சேரும் சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் சாலையில் செல்லமுடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

மேலும் 3 வது வார்டு பகுதியில் சாலை ஓரங்களில் குப்பைகளை அல்லாமல் கிடப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் இருந்து வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 3 வது வார்டு பொதுமக்கள் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலக வழியை மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.