காஞ்சிபுரம் பாரதிதாசன் பள்ளியில் விஜயதசமி புதிய மாணவர்களின் சேர்க்கை !

காஞ்சிபுரம், அக். 22 –
காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு ( 2027 – 28 )கல்வி ஆண்டிற்கான புதிய பள்ளி மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் அருண்குமார் மாணவர்களின் கைவிரலை பிடித்து அரிசியில் ‘அ, ஆ’ என்ற எழுத்துக்களை எழுத வைத்து சரஸ்வதி அம்பாளின் முன்பு பிரார்த்தனை செய்து கொண்டு மாணவர்களின் எல்.கே.ஜி., சேர்க்கையை பதிவு செய்தார். பள்ளியின் கல்வியாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் பள்ளி தாளாளரின் பொற்பாதங்களை தொட்டு வணங்கினர்.
இந்த விஜயதசமி சேர்க்கை நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவ – மாணவியர்கள், மற்றும் ஊழியர்கள் என, பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி தாளாளர் அருண்குமார் அனைவருக்கும் இனிப்பு வழங்கி விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.