
காட்பாடி அருகே மகிமண்டலத்தில் சிப்காட் அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!வேலூர், ஜூன் 21-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், மகிமண்டலம் சுற்றுவட்டார பகுதியில் கையகப்படுத்தி விளைநிலங்களை சிப்காட் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் எதிரொலியாகசி.என்.பட்டடை பகுதியில் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது.இந்த போராட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.5 கிராமங்களை உள்ளடக்கிய 3,200 ஏக்கரில் சிப்காட் அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் காட்பாடி டிஎஸ்பி விஜயகுமார், வட்டாட்சியர் மகேஸ்வரி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வராததால்டிஎஸ்பியுடன் காட்பாடி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ டாக்டர் சுதாகர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தார்.










Leave a Reply