உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இந்தியன் ரயில்வே சார்பில் மேட்டுப்பாளையத்தில் விழிப்புணர்வு பேரணி

கோவை மாவட்டம்
மேட்டுப்பாளையம்,
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இந்தியன் ரயில்வே சார்பில் மேட்டுப்பாளையத்தில் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ரயில்வே சுகாதார ஆய்வாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்பு படை (RPF), ரயில்வே ஊழியர்கள் மற்றும் பல்வேறு பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம், தூய்மை பேணுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், மரக்கன்றுகள் வளர்த்தல் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்துதல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவை உருவாக்கவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற உறுதிமொழியை பங்கேற்பாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் ரயில்வே நிர்வாகம் செய்திருந்தது.