Archives
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Year:
2026
காட்பாடி விருதம்பட்டு பகுதியில் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்த சுகாதார அலுவலர்!வேலூர் ஜூலை 1-வேலூர் மாநகராட்சி, 1வது மண்டலம், காட்பாடி, வார்டு 15ல் காட்பாடி 1வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் கே. சிவக்குமார் விருதம்பட்டு பகுதியில் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேடுகளை திடீரென ஆய்வு செய்தார். அத்துடன் வீடுகளில் சேகரிக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தனித்தனியாக தூய்மை பணியாளர்கள் சேகரிக்கிறார்களா? என்பதை முறையாக ஆய்வு செய்தார். அத்துடன் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வராத வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று தூய்மை பணியாளர்களுக்கு சில பல அறிவுரைகளை அப்போது அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இறை தொண்டு செய்து வரும் இராமசாமி TV மெக்கானிக் அவர்கள் 26.06.2026 வாத நோயால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார் அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் 28..06.2026 அன்று இரவு 9 மணியளவில் மருத்துவமனையில் காலமானார் அவர் விருப்பப்படி அவரது மனைவி ராணி மற்றும் அவரது மகள் யமுனா அவரது சகோதரர் சுப்பிரமணியன் அவர்கள் முழு சம்மதத்துடன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு இன்று 12.30 மணியளவில் உடல் தானம் வழங்கப்பட்டது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பான ஐக்கிய ஜமாத் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்சுனில் ஆனந்த் அவர்கள் காட்டூர் பள்ளிவாசல் மதரசாவில் இன்று நேரில் சந்தித்தார் நிகழ்வில் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிவாசல்களின் குறைகளையும் அப்பகுதிகளோடு குறைகளை கேட்டறிந்து உடனடியாக நேரில் ஆய்வு செய்து கொடுக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் அனைத்து பணிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார்
மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் பெண் பயணிகளுக்கு ரயில்வே காவல்துறையினரும் சிங்கப்பெண் காவலர்களும் இணைந்து விழிப்புணர்வு
வேலூர் தாலுகா காவல் ஆய்வாளர் புனிதா டிப்பர் லாரி உரிமையாளர் களிடம் வசூல் வேட்டை!வேலூர், ஜூன் 30-வேலூர் தாலுகா காவல் ஆய்வாளராக புனிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்டதும் டிப்பர் லாரி உரிமையாளர்களுடன் கூட்டம் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டார். அதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு சக காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் கூட்டம் காவல் நிலையத்தில் மாலை வேளையில் ஏற்பாடு செய்யப்பட்டது இந்நிலையில் அங்கு வந்த டிப்பர் லாரி உரிமையாளரிடம் லாரி ஒன்றுக்கு தலா ரூபாய் பத்தாயிரம் மாமுலாக காவல் நிலையத்திற்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன் இந்த தொகை ஒரு மாதம் கூட நிறுத்தாமல் செலுத்த வேண்டும் என்றும் அவர் மிரட்டலாக உத்தரவிட்டார். குறிப்பாக அவருடன் செய்தியாளர் போர்வையில் ஒருவர் சுற்றி வருகிறார். அவரும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அந்த மாமூலை வசூல் செய்தார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த செய்தியாளர் போர்வையில் உள்ள ஒரு டுபாக்கூர் நிருபர் பல்வேறு வழக்குகளில் சிக்கி சின்னா பின்னம் ஆனவர் என்று கூறப்படுகிறது. இவர் காவல் ஆய்வாளர் புனிதா தங்க வீடு பார்த்து கொடுத்துள்ளார்என்று தெரிய வந்துள்ளது. இந்த நபர் தற்போது புனிதா வசம் ஐக்கியமாகி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காதுகளுக்கு தனிப்பிரிவு போலீசாரால் இதுநாள் வரை கொண்டு செல்லப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற நபர்கள் மீது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு கண் வைக்க வேண்டும் என்பதே டிப்பர் லாரி உரிமையாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வேலூர் தாலுகா காவல் நிலையத்தின் மீது ஒரு கண், ஏன் அனைத்து கண்களையும் கூர்மையாக செலுத்தினால் நன்றாக இருக்கும். குறிப்பாக இந்த விலாங்கு மீன் சிக்குவது உறுதி என்கின்றது நம்பத்தகுந்த வட்டாரம். லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் சாமர்த்தியத்தை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக காவல் ஆய்வாளர் புனிதாவுடன் சுற்றித் திரியும் அந்த டுபாக்கூர் நிருபர் மீதும் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிப்பர் லாரி உரிமையாளர்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறார் என்பதையும் நாம் போக போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.
பிரபல திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து புதுச்சேரியில் சினிமா நகரம் விரைவில் உருவாக்கி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தலைமை தணிக்கை இயக்குனர் திரு அருண் சுந்தர் தயாளன் ஐ .ஏ .எஸ்
உதகை நகராட்சி தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ்: பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் நிறைவேற்ற உறுதி
குடியாத்தம் பிரம்மாஸ் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கோரி அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் ஆட்சியரிடம் புகார் மனு!வேலூர், ஜூன் 30-வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியரக காயிதே மில்லத் அரங்கில் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்வுநாள் கூட்டம் நடந்தது. இதில், குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே, கடந்த 22.06.2026 (திங்கட்கிழமை) மாலை 4.30 மணியளவில் அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை வலியுறுத்தும் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, காவல்துறையின் அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் கவனத்திற்கு கோரிக்கைகளை கொண்டு செல்லும் நோக்கில் பொதுமக்கள் மற்றும் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, மாலை சுமார் 5.10 மணியளவில் குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் உள்ள பிரம்மாஸ் பள்ளியின் நிறுவனர் செந்தில் மற்றும் அவருடன் சிலர், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வேகமாக காரில் வந்து, ஆர்ப்பாட்ட மேடைக்கு அருகில் வாகனத்தை நிறுத்தி விட்டார். இதனால் அசம்பாவிதம் அல்லது சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், மாநில நிர்வாகிகள் ஆலோசித்து, திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே மாலை 5.25 மணியளவில் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஆர்ப்பாட்டத்தின் 5வது கோரிக்கையாக, குடியாத்தம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளிகள், குறிப்பாக பிரம்மாஸ் பள்ளியில் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்ததாகவும், அதே நேரத்தில் பள்ளி நிறுவனர் போராட்ட இடத்திற்கு வந்தது பதட்டத்தை ஏற்படுத்தியதாகவும் இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பிரம்மாஸ் பள்ளி தொடர்பாக ஏற்கனவே தமிழக முதலமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.சமூக நல உணர்வுமிகு பொதுமக்களால் 10 நாட்கள் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 22.06.2026 அன்று மாலை 6.30 மணியளவில் குடியாத்தம் நகர காவல் நிலையத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பிரம்மாஸ் பள்ளி மற்றும் அதன் நிர்வாகத்தை கண்டித்து, அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தேதி, காவல்துறை அனுமதி மற்றும் போதிய பாதுகாப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி திமுக சார்பில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: ஆர்ப்பாட்டம் செய்த திமுகவினர் கைது!வேலூர், ஜூன் 30-வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் காட்பாடி பகுதி திமுகவினர் காவல் துறை அனுமதியின்றி திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக அமைச்சர் பதவி விலக கோரி ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி திமுக வேலூர் மாநகராட்சி துணை மேயரும், தெற்கு பகுதி செயலாளருமான எம். சுனில்குமார், வடக்கு பகுதி செயலாளர் வன்னிய ராஜா, மாமன்ற உறுப்பினர் டீட்டாசரவணன், பழைய காட்பாடி மோ. திருமால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்து சித்தூர் பேருந்து நிலையம் அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பும் பதட்டமான சூழ்நிலையும் ஏற்பட்டது. மாலையில் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து திமுகவினரும் விடுவிக்கப்பட்டனர்.
1
…
7
8
9
…
85
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.