வேலூர் கோட்டை மைதானத்தில் டிஎஸ்பி சீருடையில் திரிந்த பெண்ணை கைது செய்த போலீசார்! வேலூர், ஜூன் 13 -வேலூர் கோட்டை மைதானத்தில் உள்ள பூங்காவில் ஒரு இளம்பெண் டிஎஸ்பி சீருடையில் வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவரைப் பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் இதுகுறித்து வடக்கு காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆய்வாளர் உத்தரவின் பேரில் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முறைப்படி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் போலி டிஎஸ்பி உடையில் இருந்தது தெரியவந்தது. அவர் வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த நேமபந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி (33).  இவரது கணவர் கூலி தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். உமா மகேஸ்வரி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளதும் தெரிய வந்தது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வடபழனியில் தங்கி ஒரு வீட்டில் வேலை செய்துள்ளார். அந்த வீட்டில் 22 பவுன் நகை திருட்டு வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல்  சென்னை பூக்கடை பகுதியில் உறவினர் வீட்டில் ரூபாய் 15,000 திருடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வேலூர் மேல் அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவருக்கு அறிமுக நண்பராகி அந்த நபர் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க டிஎஸ்பி சீருடை அணிந்து வேலூருக்கு வந்துள்ளதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். ஆண் நண்பர் வர கால தாமதமானதால் வேலூர் காவலர்களிடம் சிக்கிக் கொண்டுள்ளார் உமாமகேஸ்வரி. உமாமகேஸ்வரியிடம் வேலூர் வடக்கு போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருந்த வேள

காஞ்சிபுரம் மாவட்டத்தில்கால்நடைகள் குறித்த விவரங்கள்மின்னணு மூலம் கணக்கெடுக்ககலெக்டர் சினேகா உத்தரவு!காஞ்சிபுரம், ஜூன் 13 – காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடைகளின் முழு விவரங்களை, மாவட்ட கலெக்டர் சினேகா உத்தரவின் பேரில்,தேசிய மின்னணு இயக்க வழி இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்க உள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பு வருமாறு;’காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம மக்களால் வளர்க்கப்பட்டு வரும் 18 லட்சத்து 78 ஆயிரத்து 909 கால்நடைகளுக்கு, 12 இலக்க காதுவில்லை அடையாள எண் பதிவு செய்யப்பட உள்ளது. பின்னர் இதன் முழு விவரத்தையும் மின்னணு தகவல் மூலம் பதிவேற்றம் செய்திட தேசிய மின்னணு கால்நடை இயக்கம் திட்டம் வகுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் செயற்கைமுறை கருவூட்டல், கால்நடை காப்பீட்டு விவரம், சினையுறு சதவீதம், கன்று ஈன்ற விவரம் ஆகியவை கணக்கில் எடுக்க வேண்டும்.கன்று பிறப்பு விகிதம், உரிமையாளர் பதிவு மற்றும் பெயர் மாற்றம், பருவத்திற்கேற்ப மேற்கொள்ளப்படும். கோமாரி நோய், தோல் கழலை நோய், அடைப்பான் நோய் ஆகியவற்றிற்கான தடுப்பூசி பதிவுகள், நோய் கிளர்ச்சி அறிக்கை, பால் உற்பத்தி பதிவு விவரங்கள் ஆகிய தரவுகள் சேகரிப்பட்டு கணக்கில் எடுக்கப்படும். இந்த விவரங்களை கால்நடை பராமரிப்புத் துறை மூலம் தேசிய மின்னணு இயக்க வழி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.இந்த விவரங்களை பதிவேற்றம் செய்யும்போது உரிமையாளரின் கைபேசி எண், ஆதார் எண் ஆகியவற்றை ஒருங்கிணைத்து விவசாயின் கைபேசிக்கு அனுப்பப்படும். விவசாயிகளின் செல்போன் ‘மெசேஜி’ மூலம் கால்நடைகளின் முழு விவரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. விவசாயிகள் தங்களது கால்நடைகளை கொள்முதல் – விற்பனை ஆகியவை மேற்கொள்ளும் போது, கால்நடைகள் பற்றிய முழு விவரமும் கால்நடை வளர்ப்போர் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட பணி தொடர்பாக கிராமங்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறையினர் வருகை தரும்போது, கால்நடை வளர்ப்போர் தங்கள் செல்போனுக்கு வரும் ‘மெசேஜ்’ மூலம் கேட்கப்படும் விவரங்களை தெளிவாக தெரிவிக்குமாறு கால்நடை வளர்ப்போர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்த நபரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்– பெரும் விபத்து தவிர்ப்பு!வேலூர், ஜூன் 12-காட்பாடி அருகே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்த நபரை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியதால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.நேற்று (11.06.2026) அதிகாலை சுமார் 2.40 மணியளவில், லத்தேரியில் Track Packing Machine பணியை முடித்துவிட்டு திரும்பிய SSE/P.Way விஜய் குமார், கி.மீ. 130/27 பகுதியில் கீழ்பாதை தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பதைக் கண்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். முதலில் கி.மீ. 137 என தகவல் கிடைத்த நிலையில், ASI/RPF காட்பாடி பி. ஆர். முரளி சம்பவ இடத்தை உறுதி செய்து உடனடியாக RRI கேபினை தொடர்புகொண்டு, ஜோலார்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் எண் 13351 தன்பாத்–ஆலப்புழா எக்ஸ்பிரஸை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.பின்னர் ASI பி. ஆர். முரளி மற்றும் தலைமைக் காவலர் எம். சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்டவாளத்தின் மீது தலை வைத்து படுத்திருந்த நபரை பாதுகாப்பாக அகற்றி அவரது உயிரைக் காப்பாற்றினர். அதன் பிறகு ரயில் தனது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டது.மீட்கப்பட்ட நபர் பி. ராமச்சந்திரன் (46), வேலூரைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவருக்கு ஆரம்பகட்ட மருத்துவ உதவி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டதுடன், மேல்கட்ட நடவடிக்கையாக மனநல பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் காட்பாடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பேரணாம்பட்டில் த.வெ.க.சார்பில் பொதுமக்களுக்கு இலவச நீர் மோர், குளிர்பானங்கள் வழங்கல்: எஸ். நாசிர் அஹமத் பங்கேற்பு! வேலூர்,ஜூன் 12-தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், வேலூர் மேப்பாஷமாவட்ட த.வெ.க. செயலாளர் ஆர்.வேல்முருகன் ஆகியோரின் அறிவுறுத்தலின், பேரணாம்பட்டு நகர தமிழக வெற்றி கழகம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு பேரணாம்பட்டு பொதுமக்களுக்கு நீர். மோர், குளிர்பானங்கள் வழங்கும் விழா தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றே த.வெ.க. செயலாளர். எஸ். நாசிர் அஹமத். தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் குளிர்பானங்களை வழங்கினார். பேரணாம்பட்டு வடக்கு நகர த.வெ.க. நிர்வாகிகள் இணைச் செயலாளர் மௌலானா யூசுப், பொருளாளர். எம். பாக்கியராஜ். துணைச் செயலாளர். எஸ். நவாஸ். சுஹேல். நகர செயற்குழு உறுப்பினர்கள். ஷகீல் . இஸ்மாயில். நமீத் ரியாஸ்.தசீன்.தஹும் நாஜூம். ஆசிப். ஷமில். சாந்தா சிக்கந்தர்.கனி ரஃபி.தன்சீம்.அகில்ஷா பாபு. மாணவரணி அமைப்பாளர் வசீம் .நியாஸ். உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் டி.வி.ஷமீல் அஹமத். நன்றி கூறினார்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை செய்யாறு கால்பந்தாட்ட வீரர்கள்தொலைக் காட்சியில் கண்டுகளிப்பு!செய்யாறு, ஜூன் 12 -உலகக் கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கிய முதல் ஆட்டத்தை செய்யாறு கால்பந்தாட்ட வீரர்கள் கண்டுகளித்தனர்.உலகில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கொண்டாடப் பட்டு வருவது உலக கால்பந்து போட்டிகள். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கால்பந்து போட்டி கடந்த 1930ம் ஆண்டு முதன் முதலில் தொடங்கியது. இந்தப் போட்டிகளில் கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் நாடுகள் மட்டுமே தகுதி பெறுகின்றன. இதற்காக பல்வேறு சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு தகுதிவாய்ந்த அணிகள் தேர்வு செய்யப்படுகின்றன.அந்த வகையில் நடப்பாண்டு 23வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இந்தப் போட்டிகளை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகள் சேர்ந்து நடத்தப்படுகின்றன. இதற்கான தொடக்க விழா நேற்று இரவு பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்தப் போட்டியில் 48 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.இவ்வாண்டுக்கான முதல் போட்டி மெக்சிகோ – தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் மோதியது.திருவண்ணாமலை மாவட்டத்திலேயே செய்யாறு கால்பந்து போட்டியில் சிறந்து விளங்குகிறது. செய்யாறில் மட்டும் 200க்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட வீரர்கள் உள்ளனர்.‌ இவர்கள் பள்ளி – கல்லூரி பருவங்களில் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள் குழுக் குழுவாக ஒன்று சேர்ந்து தங்களது வீடுகளில் நேற்று உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டி தொடக்க விழாவையும், முதல் போட்டியையும் கண்டுகளித்தனர்.இது குறித்து மாநில அளவில் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்என்.தண்டபாணி ( 57 ). கூறியதாவது; கால்பந்தாட்டம் என்றாலே எனது உயிர். கடந்த 1990ம் ஆண்டு நான் செய்யாறு அரசு ஆண்கள் பள்ளியில் படித்திருந்த போது எனது தலைமையில் கால் பந்தாட்ட குழு மாநில அளவில் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றோம். இதனால், செய்யாருக்கும் – அரசு பள்ளிக்கும் பெருமையை சேர்த்து கொடுத்தோம். செய்யாறில் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது இளைஞர்கள் கால்பந்தாட்டத்தை ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். ஒரு மாதத்துக்கு மேல் நடைபெற உள்ள ‘உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள்’ எங்களுக்கு தினம் தினம் ஒரு விழாவாகவே நாங்கள் கண்டுகளிக்கப் போகிறோம். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் இந்தியா இன்னும் தகுதி பெறவில்லை என்பதுதான் எங்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது; ‘இவ்வாறு கால்பந்தாட்ட வீரர்என்.தண்டபாணி கூறியுள்ளார்.