மெட்டுக்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்!வேலூர், ஆக.16-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், மெட்டுக்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவி அனிதா இளங்கோவன் தலைமையில் நடந்தது. ஊராட்சி எழுத்தர் சரவணன் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார். மெட்டுக்குளம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்தும், பொதுமக்கள் கூறிய கருத்துக்களும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அடிப்படை தேவைகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை உள்ளிட்ட வசதிகள் தன்னிறைவு பெற்றதாகவும் கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை கிராம சபையில் தெரிவித்தனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிராம சபை கூட்டம் நிறைவு பெற்றதும் அனைவருக்கும் மதிய உணவு அளித்து உபசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply