செய்யாறில் வி.சி.க., சேர்ந்த பொறுப்பாளர் உட்பட 50 பேர்

த.வெ.க.,வில் மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில் இணைந்தனர் !

செய்யாறு, ஜூனு 19 –
செய்யாறில் மாற்றுக் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர் உட்பட 50 பேர் நேற்று த.வெ.க.,வின் கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் முன்னிலையில், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டசபை தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த தொகுதியில் உள்ள மேனல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்
எஸ்.கே.எம். மணிகண்டன் ( 32 ). இவர், த.வெ.க.,வின் மாவட்ட இளைஞர் அணி இணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வெண்பாக்கள் ஒன்றிய துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த சபேசன் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த 50 தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையும், மாவட்ட இளைஞர் அணி இணை அமைப்பாளர் மேனல்லுர்
எஸ்.கே.எம்.
மணிகண்டன் முன்னிலையும் வகித்தார்.

கட்சியில் இணைந்த புதியவர்களுக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் சால்வை அணிவித்து வரவேற்றார். முன்னதாக மாவட்ட இளைஞர் அணி இணை அமைப்பாளர் மணிகண்டன் மாவட்ட செயலாளருக்கு
ஆளுயர மாலை அணிவித்தார்.

பட விளக்கம்:

செய்யாறில் மாற்றுக் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர் உட்பட 50 தொண்டர்கள் த.வெ.க.,வில் இணையும் நிகழ்ச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில் நடந்த போது எடுத்தப் படம்.