வைகாசி அமாவாசைக்காக மேல்மலையனூருக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!வேலூர்,மே 16-வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. இதையொட்டி மே 16 முதல் வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து 25 பேருந்துகளும், திருப்பத்தூரில் இருந்து 15 பேருந்துகளும், ஆற்காட்டில் இருந்து 15 பேருந்துகளும் என மொத்தம் 55 சிறப்பு அரசு பேருந்துகளை மேல்மலையனூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்க ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தால் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயனடையுமாறு போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.