தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் – தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி

தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் பாலசுந்தராசு நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

இதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் மகனும் மாநில இளைஞரணி தலைவருமான வியாங்கோ பாண்டியன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்

தேக்கம்பட்டி பாலசுந்தரராசு நினைவிடத்தில் மாலை அணிவித்து “வீரவணக்கம் வீரவணக்கம்” என கோஷங்களை எழுப்பி அவருக்கு அஞ்சலி செலுத்தினர் இதில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் பாலா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

பேட்டி – வியாங்கோ பாண்டியன் (இளைஞர் அணி மாநில தலைவர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்)