குடியாத்தம் தனி தொகுதியை தக்க வைத்துக் கொண்ட அதிமுக வேட்பாளர் பரிதா!வேலூர், ஏப். 22-குடியாத்தம் தொகுதியில், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 7 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற ஜி.பரிதாவே இந்த முறை மீண்டும் களம் காண்கிறார். வெற்றி வாய்ப்பை இழந்தாலும் சற்றும் கவலைப்படாமல், கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பணி, கட்சிப் பணி, பேரணாம்பட்டு அரிமா சங்கப் பணி என்று பொதுச்சேவையில் ஈடுபட்டதே அவருக்கு பிளஸ் பாயின்ட். செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாகமாய் வரவேற்கும் மக்கள் அவரை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்புவோம் என்று உரத்தக் குரலில் ஒருசேர முழங்குகின்றனர்.திமுகவே போட்டியிடும் என்ற நிலையில் கடைசி நேரத்தில் தேமுதிகவுக்கு சீட் கொடுத்ததோடு, வெளியூர் நபரான கே.பி.பிரதாப் வேட்பாளர் என்பதால் காணப்படும் அதிருப்தியும் பரிதாவுக்கு போனஸ் மதிப்பெண்கள் கிடைக்கின்றன. தேர்தல் பணியை தொய்வு இல்லாமல் செய்து வந்த பரிதாவுக்கு இம்முறை வெற்றி நிச்சயம் என்பதே மக்களின் டாக்.குடியாத்தம் ரிசர்வ் தொகுதியில், அதிமுக சார்பில் ஜி.பரிதா, திமுக கூட்டணியில் தேமுதிகவின் கே.பி.பிரதாப், தவெக சார்பில் மியூஸிக் டீச்சர் சிந்து, நாம் தமிழர் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர் இமலன், சசிகலாவின் அஇபுதமமுக சார்பில் தபிதாள் உட்பட பலர் களம் காண்கினறனர்.தோல்வியுற்றாலும் மனம் தளராமல் 5 ஆண்டுகள் மக்கள் பணியும், கடந்த சில மாதங்களில் வேட்பாளராகி விடுவோம் என்று தலைமை அறிவித்த உறுதிமொழியால் தொகுதியை பல முறை ரவுண்ட் வந்துவிட்ட ஜி.பரிதாவுக்கு தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் பரிட்சயம். இதோடு, கிளைக்கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை நேரடியாக அறிமுகமாகிவிட பரிதாவுக்கு செல்லுமிடமெல்லாம் உற்சாக வரவேற்பு என்றால் கேட்கவா வேண்டும்.குடியாத்தம் பொது தொகுதியாக இருந்தபோது 2006 எம்எல்ஏ தேர்தலின்போது, அதிமுக சார்பில் போட்டியிட்ட நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி தனக்கு எதிராக தனித்துப் போட்டியிட்ட எல்.கே.சுதீஷ் பெற்ற 20 ஆயிரம் வாக்குகளால், தான் 1653 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் ஜி.லதாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். அன்று அந்த சுதீஷ் எம்.பி.யாகிவிட்ட நிலையில், தனக்கான மாபெரும் அரசியல் வாய்ப்பை இழக்க நேரிட்ட தேமுதிகவை வீழ்த்திவிட வேண்டும் என்று ஜே.கே.என்.பழனியும் பொது முகவராக அதிமுகவின் பரிதாவுக்கு வியூகங்களை வகுத்து கொடுக்கிறார். அதிமுகவின் கஸ்பா மூர்த்தி, எல்.சீனிவாசன், பொகளூர் பிரபாகரன், கள்ளூர் சிவா, வக்கீல் கோவிந்தசாமி என்று பெரிய பட்டாளமே பரிதாவின் வெற்றிக்கு துணை நிற்கிறது.பாமகவின் மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி, முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் குமார், நகர செயலாளர் புவனேஸ்வரிபேட்டை குமார் உட்பட நிர்வாகிகள் இளைஞர் படையோடு பரிதாவுக்கு தோள் கொடுக்கின்றனர். பாஜகவின் ஜெகன், புரட்சி பாரதம் கஸ்பா மேகநாதன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் களப் பணியை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தை அதிமுக வேட்பாளர் பரிதா சென்னைக்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இரு மாதங்களுக்கு முன்பு பள்ளிகொண்டாவுக்கு வருகை தந்த தமமுக தலைவர் ஜான்பாண்டியன் அதிமுக கூட்டணியில் போட்டியிடுவோரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தனது கட்சியினருக்கு அளித்த உத்தரவைப் பின்பற்றி, வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் லாவண்யா தினேஷின் பெண்கள் படை தொகுதியை ரவுண்ட் வருகிறது. பரிதாவும் நூதன பிரசாரத்தில் தூள் கிளப்பினார். போண்டா சுடுதல், டீ போட்டு தருதல், குழந்தைகளை அழைத்து மகிழ்தல், உழவர் சந்தை அருகில் உள்ள காய்கனி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து நுகர்வோர் மனதில் தனி இடம் பிடித்தார். இவ்வாறு வாக்காளர்களோடு நெருங்கி பழகும் அணுகுமுறை பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.திமுக சார்பில் கடைசி நேரத்தில் தேமுதிகவுக்கு தொகுதி அளிக்கப்பட்டதாலும், அதிலும் உள்ளூரில் உள்ள குடியாத்தம் ரமணி போன்றோருக்கு சீட் அளிக்காமல், காட்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் கே.பி.பிரதாப்புக்கு சீட் வழங்கப்பட்டதாலும் திமுக கூட்டணியினரிடையே அதிருப்தி நிலவுகிறது. சீட் கேட்டு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், எம்எல்ஏ அமலு விஜயன், மாவட்ட துணை செயலாளரும் கல்லூரி முதல்வருமான எம்.பிரதாப்குமார் மற்றும் பலர் தீவிர களப்பணியை ஆற்றுகின்றனர். இருந்தாலும், உள்ளூர் நிர்வாகிகள் இன்னமும் சோர்விலேயே இருக்கின்றனர். காமராஜர் போட்டியிட்ட குடியாத்தம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாததால், காங்கிரஸாரிடையே சோகமும் இருக்கிறது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி.சுரேஷ்குமாரும் தனது அதிருப்தியை பேஸ் புக்கிலேயே வெளிப்படுத்தியுள்ளார். மாவட்ட துணை சேர்மன் கிரு்ஷ்ணவேணி, ஒன்றிய காங்கிரஸ் தலைவர்கள் வீராங்கன், சங்கர் போன்றோர் விரக்தியில் இருக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினரும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால், விரக்தியில் செஞ்சட்டைகளை அணியவே மறுக்கின்றனர். இதனால் பிரதாப்பின் பிரசாரம் எடுபடவில்லை என்ற வேதனை தொகுதி முழுவதும் எதிரொலிக்கிறது.தவெகவின சார்பில் போட்டியிடும் மியூஸிக் டீச்சர் சிந்துவோ பேரணாம்பட்டு பகுதியில் அறிமுகம் இல்லை. இதனால், குடியாத்தம் நகரத்தையும், சுற்றுப்புற கிராமத்தையுமே சுற்றி சுற்றிவருகிறார். நாம் தமிழர் கட்சியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் இமலன் சுற்றிசுற்றி வருகிறார்.சசிகலாவின் அஇபுதமமுக கட்சி வேட்பாளர் தபிதாள் , 5 பட்டங்களைப் பெற்றவர், இலவசமாக டியூஷன் சென்டர் நடத்துபவர், சமூக சேவகர் என்று பெயரை பெற்றிருகிறார். இவரிடம் படித்த மாணவர்கள் குடியாத்தம் தொகுதியில் வாட்ஸ் ஆப்புகளில் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். தபிதாளின் மகன் ரித்திக் , குடியாத்தம் நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இருந்தாலும் அவர் தனக்கு கட்சியே முக்கியம் என்று தேமுதிக வேட்பாளர் பிரதாப்புக்கு பிரசாரத்தில் ஈடுபட்டுவருவது தொகுதியில் ஹைலைட்.சசிகலா கட்சியில் போட்டியிட குடியாத்தம் தொகுதியில் பத்து பேருக்கு மேல் சீட் கேட்டும், தபிதாளுக்கு கிடைத்தது. சீட் கேட்டு கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருந்தவர்களிடம் தபிதாள் நேரடியாக அணுகி பேசி, அவர்களை தனக்கு ஆதரவாக பிரசாரத்தில் வைக்கும் முயற்சியில் உள்ளார். இருப்பினும், சசிகலா கட்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகளோ, பொறுப்பாளர்களோ இல்லாததால், தேர்தல் பணிகளை வகுப்பதில் வேட்பாளர் தபிதாளுக்கு சிரமமாக இருக்கிறது. இருந்தாலும், அவரிடம் படித்த மாணவர்கள், கட்சி நிர்வாகிகள் துணையாக தொகுதியை வலம் வருகின்றனர். பேண்டு வாத்தியம் முழங்க அவரது பிரசாரம் அதிமுக, தேமுதிக வேட்பாளர்களையே அசத்துகிறது. மொத்தத்தில், டில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடியை நெசவாளர்களோடு இணைந்து தயாரித்த மக்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு யாரை அனுப்புவது என்று முடிவு செய்துவிட்டனர். வாக்காளர்களுக்கு தலா ரூபாய் 2500 மற்றும் ரூபாய் ஆயிரம் என்று வேட்பாளர்கள் பணத்தை வாரி இரைத்தாலும் குடியாத்தம் தொகுதியில் இம்முறை வெற்றிக்கனியை பறிப்பது அதிமுக வேட்பாளர் பரிதா என்பதை யாராலும் மாற்ற முடியாது என்பது நிதர்சனம்.

கே.வி.குப்பத்தில் ஜெகன் மூர்த்திக்கு ஜெயம்!வேலூர், ஏப். 21-முழுக்க முழுக்க கிராமங்களை கொண்ட கே.வி.குப்பம் தனி சட்டமன்றத் தொகுதியில், இரண்டாவது முறையாக களமிறங்கும் சிட்டிங் எம்எல்ஏ புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி வெற்றியை நோக்கி வலம் வருகிறார். யோகம் அவருக்கு அடிக்கும் என்பது தொகுதியின் ஹைலைட்.2008-இல் தொகுதி மறுசீரமைப்பில் புதியதாக உருவான கே.வி.குப்பம் தனி சட்டமன்றத் தொகுதியில் மூன்று முறையும் அதிமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு இருந்துள்ளது.2011-இல் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், 2016-இல் அதிமுகவின் ஜி.லோகநாதன், 2021-இல் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி என அதிமுக அணியினரே ஜெயித்தனர்.இந்த முறையும் பூவை ஜெகன்மூர்த்தியே களம் பலம் இறங்குகிறார்.திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் சொந்த தொகுதி என்பது அவரது மகன் எம்பி கதிர் ஆனந்த் வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பதால் இந்த தொகுதியை வெற்றி பெற்றே தீருவேன் என்ற கட்டாயத்தில் உள்ளார்.தொகுதி உருவான நாளிலிருந்து நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் அண்ணா திமுக கூட்டணி வெற்றி பெற்று, திமுகவை தோல்வியை தழுவ செய்த தொகுதி கே.வி. குப்பம். இந்த முறை எப்படியாவது காட்பாடியோடு, கே.வி.குப்பத்தையும் எப்படியாவது கரையேற்றி விட வேண்டும் என்று கட்டாயத்தில் கதிர் ஆனந்த் தொகுதியை சுற்றி சுற்றி வலம் வருகிறார்.’வைட்டமின் ப’வை அள்ளி அள்ளி விட்டாலும், இதுவரை கிள்ளி கிள்ளி கொடுத்தவர் என்ற பெயரெடுத்த கதிர் ஆனந்தை மக்கள் ரசிக்கவில்லை.உங்களுக்காக செருப்பாய் உழைக்கிறேன் என்று கதிர் ஆனந்த் சொல்வதை மக்கள் ஏற்கவும் தயாராக இல்லை.ஐந்தாண்டுகள் எம்எல்ஏவாக இருந்த ஜெகன் மூர்த்தி தான் செய்த சாதனைகளை பட்டியலிடுவதோடு, நிறைவேற்ற முடியாத சாதனைகளுக்கு திமுக அரசே காரணம் என்பதற்கான விளக்கத்தை மக்கள் மத்தியில் சரியான பதில் கூறுகிறார்.ஐந்தாண்டுகளில் எந்தவிதமான புகாருக்கும் ஆளாகாதவர் ஜெகன்மூர்த்தி என்பது மக்கள் மத்தியிலே அவருக்கு இருக்கும் நற்பெயர். திமுக சார்பில் களம் இறங்கும் ராஜேஸ்வரி 2011ல் வேலூர் மேயர் வேட்பாளராக நின்று தோற்றவர். அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பணியை உதறி விட்டு அப்போது தேர்தல் களம் கண்டவர். அதன்பின் 15 ஆண்டுகள் தன் மருத்துவமனையிலேயே பணியாற்றி விட்டு தற்போது தேர்தலில் களம் இறங்கி இருப்பது திமுகவினரை ரசிக்க வைக்கவில்லை.திமுகவில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி ஏமாந்தவர் தொகுதியை வலம் வந்தாலும் மன வருத்தம் அவர்களுக்கு இருக்கவே செய்கிறது.காட்பாடி, கே. வி. குப்பம் ஆகிய இரு தொகுதிகளுக்கு பொறுப்பாளராக உள்ள கதிர் ஆனந்துக்கு நெருக்கடி குழு கொடுக்கவும் திமுகவில் ஒரு தரப்பு தயாராகவே இருக்கிறது.மொத்தத்தில் ஜெகன்மூர்த்திக்கு ஜெயமாகவே இருக்கிறது என்கின்றனர் மக்கள்.

கதர் சட்டைகளை கசக்கிப் பிழியும் மாவட்டம்!திருப்பத்தூர், ஏப். 22-திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெ. விஜய் இளஞ்செழியன் தேர்தலுக்காக வழங்கப்பட்ட பணத்தில் கதர் சட்டை நிர்வாகிகளுக்கு குறைத்து வழங்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமைக்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக விஜய் இளஞ்செழியன் பதவியேற்ற நாட்களில் இருந்து நிர்வாகிகளை மதிக்காதது, தன்னிச்சையாக செயல்படுவது என்று பல்வேறு அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு கட்சித் தொண்டர்களிடையே வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் பணிக்காக ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய நான்கு தொகுதிகள் வாரியாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் குழுவினரை மதிக்காமல் தன்னிச்சையாக விஜய் இளஞ்செழியன் செயல்பட்டு வருகிறார்.இது தொடர்பாக ஆம்பூரைச் சேர்ந்த கிருஷ்ண சந்தர் என்பவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, க்ரிஷ் சோடங்கர், செல்வப் பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கும், திமுக அமைச்சர் ஏ.வ. வேலு உள்ளிட்ட திமுக தலைவர்களுக்கும் பல்வேறு புகார் மனுக்களை அனுப்பி உள்ளார்.”நகர ஒன்றிய தலைவர்களுக்கு 50 ஆயிரம் வழங்க சொல்லி கொடுத்தால் விஜய் இளஞ்செழியன் வழங்கியதோ பத்தாயிரம் ரூபாய் . முக்கிய நிர்வாகிகளுக்கு 25 ஆயிரம் வழங்க சொல்லிக் கொடுத்தால் வழங்கியதோ ஐந்தாயிரம் ரூபாய். கிளை நிர்வாகிகளுக்கு 5 ஆயிரம் வழங்கிய சொல்லிக் கொடுத்தால் வழங்கியது ஆயிரம் ரூபாய் ” என்று கதர் சட்டைகள் குமுறுகின்றனர்.

காட்பாடி செங்குட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் ராமு வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 22-காட்பாடி நகர் வடக்கு மண்டல் வார்டு எண்.4 செங்குட்டை சக்தி கேந்திரம் பூத் எண்.219,220,221 ஆகிய பூத்துகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர் வி. ராமு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அஇஅதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பா.ஜ.க மண்டல் பி.யுவராஜ் தலைமையில், சக்தி கேந்திர பொறுப்பாளர் பா.கமலவிநாயகம்,மாவட்ட செயலாளர் ஊடக பிரிவுஎம். தட்சிணாமூர்த்தி, கிளைத் தலைவர்கள் ஜி.பாலகனேசன், ஏ. ஜி. பிரகாஷ் குமார், BLA_2 ஆர்.லட்சுமணன், பி.ஜெயகுமார் மற்றும் மண்டல், மாவட்ட அணி, பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சி. எம். ஜான் தெரு, பஜனை கோயில் தெரு பகுதியில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

கே.வி.குப்பத்தில் ஜெகன் மூர்த்திக்கு ஜெயம்!வேலூர், ஏப். 21-முழுக்க முழுக்க கிராமங்களை கொண்ட கே.வி.குப்பம் தனி சட்டமன்றத் தொகுதியில், இரண்டாவது முறையாக களமிறங்கும் சிட்டிங் எம்எல்ஏ புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி வெற்றியை நோக்கி வலம் வருகிறார். யோகம் அவருக்கு அடிக்கும் என்பது தொகுதியின் ஹைலைட்.2008-இல் தொகுதி மறுசீரமைப்பில் புதியதாக உருவான கே.வி.குப்பம் தனி சட்டமன்றத் தொகுதியில் மூன்று முறையும் அதிமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு இருந்துள்ளது.2011-இல் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், 2016-இல் அதிமுகவின் ஜி.லோகநாதன், 2021-இல் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி என அதிமுக அணியினரே ஜெயித்தனர்.இந்த முறையும் பூவை ஜெகன்மூர்த்தியே களம் பலம் இறங்குகிறார்.திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் சொந்த தொகுதி என்பது அவரது மகன் எம்பி கதிர் ஆனந்த் வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பதால் இந்த தொகுதியை வெற்றி பெற்றே தீருவேன் என்ற கட்டாயத்தில் உள்ளார்.தொகுதி உருவான நாளிலிருந்து நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் அண்ணா திமுக கூட்டணி வெற்றி பெற்று, திமுகவை தோல்வியை தழுவ செய்த தொகுதி கே.வி. குப்பம். இந்த முறை எப்படியாவது காட்பாடியோடு, கே.வி.குப்பத்தையும் எப்படியாவது கரையேற்றி விட வேண்டும் என்று கட்டாயத்தில் கதிர் ஆனந்த் தொகுதியை சுற்றி சுற்றி வலம் வருகிறார்.’வைட்டமின் ப’வை அள்ளி அள்ளி விட்டாலும், இதுவரை கிள்ளி கிள்ளி கொடுத்தவர் என்ற பெயரெடுத்த கதிர் ஆனந்தை மக்கள் ரசிக்கவில்லை.உங்களுக்காக செருப்பாய் உழைக்கிறேன் என்று கதிர் ஆனந்த் சொல்வதை மக்கள் ஏற்கவும் தயாராக இல்லை.ஐந்தாண்டுகள் எம்எல்ஏவாக இருந்த ஜெகன் மூர்த்தி தான் செய்த சாதனைகளை பட்டியலிடுவதோடு, நிறைவேற்ற முடியாத சாதனைகளுக்கு திமுக அரசே காரணம் என்பதற்கான விளக்கத்தை மக்கள் மத்தியில் சரியான பதில் கூறுகிறார்.ஐந்தாண்டுகளில் எந்தவிதமான புகாருக்கும் ஆளாகாதவர் ஜெகன்மூர்த்தி என்பது மக்கள் மத்தியிலே அவருக்கு இருக்கும் நற்பெயர். திமுக சார்பில் களம் இறங்கும் ராஜேஸ்வரி 2011ல் வேலூர் மேயர் வேட்பாளராக நின்று தோற்றவர். அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பணியை உதறி விட்டு அப்போது தேர்தல் களம் கண்டவர். அதன்பின் 15 ஆண்டுகள் தன் மருத்துவமனையிலேயே பணியாற்றி விட்டு தற்போது தேர்தலில் களம் இறங்கி இருப்பது திமுகவினரை ரசிக்க வைக்கவில்லை.திமுகவில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி ஏமாந்தவர் தொகுதியை வலம் வந்தாலும் மன வருத்தம் அவர்களுக்கு இருக்கவே செய்கிறது.காட்பாடி, கே. வி. குப்பம் ஆகிய இரு தொகுதிகளுக்கு பொறுப்பாளராக உள்ள கதிர் ஆனந்துக்கு நெருக்கடி குழு கொடுக்கவும் திமுகவில் ஒரு தரப்பு தயாராகவே இருக்கிறது.மொத்தத்தில் ஜெகன்மூர்த்திக்கு ஜெயமாகவே இருக்கிறது என்கின்றனர் மக்கள்.

கோட்டையை பிடிக்கிறார் எஸ். ஆர்.கே.அப்பு!வேலூர், ஏப் .22-சிப்பாய் புரட்சி நடந்த வேலூர் கோட்டைக்கு ஒரு வரலாறு உண்டு. அரசன் இல்லா கோட்டை என்பார்கள்.வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்தக் கோட்டையை எம்எல்ஏவாக இந்த முறை அலங்கரிக்கப் போவது எஸ். ஆர்.கே. அப்பு என்கின்றனர் மக்கள்.திமுகவின் தொடக்க காலத்தில் செல்வாக்கு பெற்ற ஊர்களில் வேலூர் ஒன்று.’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்று அறிஞர் அண்ணா கூறியது இந்த ஊரில் தான்.எப்போதும் திமுகவின் ஆதிக்கம் நிறைந்த தொகுதியில் 2011 இல் அதிமுகவின் டாக்டர் வி. எஸ்.விஜய் வெற்றி பெற்றார்.பலமுறை அதிமுக களம் கண்டாலும் கூட்டணிகள் களம் கொண்டாலும் திமுகவுக்கு சாதகமான தொகுதிகளில் இதுவும் ஒன்று.2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.பத்தாண்டுகள் எம்எல்ஏ ஆக இருந்த திமுகவின் கார்த்திகேயன் மூன்றாவது முறையாக களம் காண்கிறார். மேயராகவும் இருந்தவர். ஆனால் இந்த முறை தொகுதி அவருக்கு சாதகமாக இல்லை என்று கருத்து கணிப்பில் தெரிகிறது.மக்களிடையே நெருங்கி பழகினாலும் 15 ஆண்டுகாலம் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்த அவருக்கு எதிர்ப்பலை வீசுவது தெரிகிறது.இதற்கு காரணம் வேலூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர். கே.அப்பு. காட்பாடி தொகுதியில் ஒருமுறையும், வேலூர் தொகுதியில் இரு முறையும் என மூன்று முறை சட்டமன்றத் தொகுதியில் தோல்வியை தழுவினாலும் மக்கள் பணியே மகேசன் பணி என்று தொடர்ந்து களத்தில் இருக்கிறார் அப்பு. அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் சுகத்திற்கும் நிகழ்வுகள் பிரச்சனைகளுக்கு ஓடோடி உதவி செய்யும் அப்புவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து விட வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர்.இதனால் உற்சாகமாய் வலம் வரும் அப்பு வேலூர் கோட்டையில் இருந்து சென்னை கோட்டைக்குச் செல்வதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன.நடிகர் விஜய்யின் தவெக வினோத் கண்ணன், நாம் தமிழர் கட்சியின் சோனியா என்று பலர் களம் கண்டாலும் வாக்குகள் பிரிக்கத்தான் தவிர வெற்றிக்கு வித்திட வில்லை.அப்புவின் கனவு நிறைவேறுவதற்கான சாத்திய கூறுகள் தென்படுகின்றன என்பதோடு, வேலூர் கோட்டையின் அரசனாக அப்பு முடி சூடுவார் என்பதில் ஐயமில்லை என்பது வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சிறை அதிகாரிகள் கவனமாக பணியாற்ற வேண்டும்: சிறைத் துறை தலைவர் சங்கர்!வேலூர், ஏப். 21-சிறை அதிகாரிகள் சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள், செல்போன், போதை பொருட்களை கொண்டு செல்ல துணை போய் வேலையை இழக்காதீர்கள் என -சிறைத்துறை தலைவர் சங்கர் சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசினார்.வேலூர் மாவட்டம்,தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் சிறைத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி நிறைவு விழாவும், பட்டமளிப்பு விழாவும் நடந்தது.இதில் தமிழகத்தின் சிறைத்துறை மற்றும் சீர்திருத்த நிர்வாக துறையின் டிஜிபி சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.இதில் கர்நாடக, தமிழ்நாடு, நாகாலாந்து, மத்திய பிரதேசம், கேரளம், டில்லி, ஆந்திரா ஆகிய மாநில சிறை அதிகாரிகளுக்கு பட்டங்களும், சான்றுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.3 மாத பயிற்சி மற்றும் 9 மாதங்கள் பயிற்சியை அதிகாரிகள் நிறைவு செய்தனர். இந்த விழாவில் சிறை சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப், பேராசிரியர் ஃப்யூலா, இணை இயக்குநர் கோவிந்தராஜன் உள்ளிட்டோரும் மற்றும் சிறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்இவ்விழாவில் தமிழகத்தின் சிறைத்துறை மற்றும் சீர்திருத்த நிர்வாக துறையின் டிஜிபி சங்கர் பேசுகையில், நாம் ஆங்கிலேயர் கால சிறை சட்டங்களை சீர் திருத்தம் செய்துள்ளோம்.சீர் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் நம்முடைய மனநிலையை மாற்ற வேண்டும். அதனை மாற்றுவது முக்கியம். நாம் நிச்சயம் அதனை மாற்றுவோம். அடக்குமுறை மனப்பான்மை மாறி சிறையில் சீர்திருத்தம் செய்வோம்.ஒரு சிறை வாசி திருந்தி நல்ல வாழ்க்கை முறைக்கு போனால் அது சிறை நிர்வாகத்தின் வெற்றி.மாறாக அதே சிறைவாசி கடுமையான குற்றவாளியாக வந்தால் அது சிறை நிர்வாகத்தின் தோல்வி.சிறை அதிகாரிகள் எதற்காக பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். உயரதிகாரிகள் பிடிக்காததால் அல்ல, அவர்கள் மீது கம்பீரமான குற்றச்சாட்டுகள் உள்ளது.அதற்கு அந்த அதிகாரியே தான் காரணம்.இது நம் பணிக்காலம் முழுவதும் நமது காதில் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். என்ன குற்றச்சாட்டு அதிகாரிகள் மீது என்றால் கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை உள்ளே அனுமதித்தார்.சிறை கைதிகளுக்கு வசதி செய்து தர பணம் வாங்கினார். இது எல்லாம் பொதுவான குற்றச்சாட்டுகள்.இதற்கெல்லாம் அந்த அதிகாரி தான் காரணம். ஆனால் எனக்கு குடும்பம் இருக்கிறது. குழந்தையில்லை. எப்படியாவது மீண்டும் பணியில் சேருங்கள் என கெஞ்சுகிறார்கள்.அவர்கள் எல்லாம் இங்கு பயிற்சியை முடித்து வந்தவர்களாக இருப்பார்கள், ஆகவே நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.அரசின் நல்ல விதிகள் சட்டங்கள் இருக்கிறது. ஆனால் பிரச்சணை எப்படி வருகிறது என்றால் அந்த விதிகள் சட்டங்கள் மீறி நீங்கள் (அதிகாரிகள்) செயல்பட கூடாது.தொழில் விதிகளை பின்பற்ற வேண்டும். வேலைக்கு நேர் எதிரான விஷயத்தை செய்ய கூடாது.சிறையினுள் போதை பொருட்களோ, தடை செய்யப்பட்ட பொருட்களோ, செல்போனையோ கொண்டு செல்ல அனுமதிப்பதை அதிகாரிகள் நீங்கள் செய்ய கூடாது என அவர் பேசினார்.

தேர்தலுக்கு மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கமாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ஜாக்டா ஜியோ கோரிக்கை!வேலூர், ஏப். 21-தேர்தல் பணியில் மாவட்டம் ஆகும் முழுவதும் ஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டனர். எனவே தேர்தல் நடைபெறும் நாளுக்கு அடுத்த நாள் 24.04.2026 அன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்க கோரி வேலூர் மாவட்ட ஜாக்டா ஜியோ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இன்று வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்க ஜாக்டா ஜியோ நிர்வாகிகள் வருகை தந்தனர். மாவட்ட ஆட்சியர் முகாம் சென்றிருப்பதால் தேர்தல் பிரிவு வட்டாட்சியர் வி.ரமேஷை யமுனை சந்தித்து கோரிக்கை மனுவை ஜாக்டா ஜியோ நிர்வாகிகள் அளித்தனர். மேலும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர்.ஜாக்டா ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டி.டி.ஜோஷி, ஜி.சீனிவாசன், ஆ.ஜோசப்அன்னையா மற்றும் மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயக்குமார், ஜி.டி.பாபு, எம்.எஸ்.செல்வகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன், மகளிர் துணைக்குழு தலைவர் ச.ஜோதி, முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர், வேலூர் வடக்கு வட்ட கிளை தலைவர் எஸ்.சபரிகிரிவாசன், தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக வேலூர் கல்வி மாவட்ட தலைவர் வி.திருக்குமரன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கோரிக்கை மனுவை அளித்தனர்.கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.1.தேர்தல் பணியில் மாவட்ட முழுவதும் ஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டனர். எனவே தேர்தல் நடைபெறும் நாளுக்கு அடுத்த நாள் 24.04.2026 அன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்க அறிவிக்க கோருகின்றோம்.2.16.04.2026 முதல் பள்ளி மாணவர்களுக்கு கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் மட்டும் பள்ளி பணிகளுக்காக 25.04.2026 வரை வருகை தர பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.3.16வது சட்டமன்ற தேர்தல் 06.04.2024 செவ்வாய்கிழமை நடைபெற்ற போது அதற்கு அடுத்த நாள் 07.04.2024 புதன்கிழமை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை நாளாக அன்றைய வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் திருமிகு.அ.சண்முகசுந்தரம் அவர்கள் ஆசிரியர்களின் கோரிக்கயினை ஏற்று அறிவித்துள்ளார்கள்.4.தேர்தல் பணியில் மாவட்ட முழுவதும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டனர். தேர்தல் நடைமுறைகள் மற்றம் விதிகளுக்கு உட்பட்டு உடல் நலகுறைபாடு காரணமாக பணிசெய்ய இயலாத நிலையில் விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலக்கு வழங்கிட கோருகின்றோம்.5.சட்டமன்ற தொகுதி மாறி பணி செய்ய பணிக்கப்பட்டுள்ள பலருக்கு தபால் வாக்குகள் இன்னமும் வழங்கப்படாத நிலை உள்ளது. தாங்களும் உரிய நடவடிக்கை உடன் மேற்கொண்டு தபால் வாக்குகள் வழங்கிட ஜாக்டா ஜியோ பேராமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.