“பகல் கொள்ளையில் பழனி.. வேலூர் தாசில்தாரின் ஆபாச பேச்சு!… பெண் ஆட்சியாளர் நடவடிக்கை எடுப்பாரா..??

வேலூர் மக்களிடம் லஞ்சக்கையூட்டு கேட்டு வாங்கிக் கொண்டு பட்டையைத் தீட்டும் தாசில்தார் பழனி.. விழித்துக் கொள்ளுமா வேலூர் விஜிலென்ஸ் போலீஸ்..!!! அரசு அலுவலகங்களில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் அதிகமாகி வரும் நிலையில், இந்த லஞ்சக்கையூட்டுச் சம்பவமும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் இன்னும் 3 மாதங்களில் லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்படும் என தவெக சர்க்கார் முதல்வர் டூ மந்திரிகள் வரை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது முழங்கி வரும் வேளையில்,

தமிழ்நாட்டில் தவெக புதிய சர்க்காரின் லஞ்ச ஒழிப்பு எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும், அரசு ஊழியரான வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரெகுலர் தாசில்தாராக கடந்த 5 மாதங்களாகப் பணிபுரிந்து வரும் பழனி என்பவர். முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்கள். கூறியதை உதாசீனப்படுத்திவிட்டு மிகத் துணிச்சலாக அப்பாவி ஏழைகளிடம் நித்தம் நித்தம் சிப்பந்தி கோபியின் மூலமாகவும், இடைத்தரவர்களுடன் இணக்கமாக இருந்து கொண்டு தன் செய்ய வேண்டிய அரசு கடமைகளை சரிவராக செய்ய வேண்டிய நிலையில், பல்வேறு வேலைக்கு லஞ்சக்கையூட்டு வாங்கிக் கொண்டு அரசு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, தமிழக வெற்றிக் கழக சர்க்கார்ப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தவெக நிர்வாகியும் விளையாட்டுத்துறை மந்திரியுமான ஆதவ் அர்ஜூனா பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அரசு அலுவலகங்களில் நிலவும் லஞ்சக்கையூட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறை அலுவலகங்களில் இன்னும் 3 மாதங்களில் (90 நாட்களில்) லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும் என்று முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், தவெக அரசு “ஜீரோ கரப்ஷன்” என்ற கொள்கையில் மிக உறுதியாக இருப்பதாகவும், முதலமைச்சரின் பெயரைச் சொல்லி தவெக கட்சிக்காரர்கள் யாரும் அரசு அலுவலகங்களில் தலையிடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், மக்கள் வரிப்பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூடத் தொடமாட்டேன் என முதலமைச்சர் கூறியுள்ளதாகவும் பொதுப்பணித்துறை மந்திரி ஆதவ் அர்ஜூனா அந்தச் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை கொஞ்சம் அச்சமும் பயமும் அறியாத அரசு ஊழியரான. வேலூர் மாவட்டம், வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் வேலூர் டூ கடலூர் தேசிய நெடுஞ்சாலை வேலப்பாடியில் அமைந்துள்ளது. இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ரெகுலர் தாசில்தாராகப் பணிபுரிந்து வருபவர் அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளடங்கிய கரடிகுடி அருகே தேவிசெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பழனி. இவர் வருவாய்த் துறையில் அடி எடுத்து வைப்பதற்கு முன் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் குரூப் 2 தேர்வில் கடந்த 2011ம் ஆண்டு தேர்வு எழுதி அதில் தேர்ச்சிப் பெற்று 2012ல் காஞ்சிபுரம் மாவட்டம், வருவாய்த் துறையில் உதவியாளராகப் பணிக்கு சேர்ந்து அதன் பிறகு மாவட்டத்தின் கீழ் பணியிட மாற்றத்தில் சொந்த மாவட்டமான வேலூர் வருவாய்த்துறைக்கு உள்ளடங்கிய குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணியிடம் மாறுதலாகி அங்கு சில பல வருடங்கள் பணிபுரிந்து பிறகு அங்கிருந்து பேரணாம்பட்டு, அணைக்கட்டு, வேலூர் போன்ற வட்டாட்சியர் அலுவலகங்களின் கீழ் வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார், பிறகு மேஜிஸ்திரேட் பயிற்சிப் போன்றவற்றை முடித்து கடந்த 2024 ஆம் ஆண்டு ரெகுலர் தாசில்தாராக தன் ஏற்கனவேப் பணிபுரிந்த குடியாத்தத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார் அங்கு 6 மாதங்கள் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளடங்கிய பல்வேறு பணிக்காக வரும் அப்பாவி ஏழை மக்களிடம், கிராமங்களில் (VAO) அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் தலையாரி முதல் விஏஓக்களிடம் வரை லஞ்சக்கையூட்டு பெற்றுக் கொண்டு தான் பல்வேறு சான்றிதழ்கள் வழங்குவதாகவும், பட்டா சப் டிவிஷன், அயன் பட்டாவை ரெகுலர் பட்டாவாக மாற்றவும், பட்டா மாறுதல், இலவச பட்டா, சாதி சான்றிதழ், ஒருங்கிணைந்த சான்றிதழ் போன்றவற்றை கேட்டு வரும் பயனாளிகளை தனக்கு கீழ்யுள்ள உதவியாளர்களை வைத்து லஞ்சமாகப் பெரும் தொகையை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு செய்ய வேண்டிய அரசு கடமைகளை செய்யாமலே கிடப்பில் போட்டுவிட்டு ஐந்து, ஆறு மாதத்தில் வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணியிட மாறுதல் பெற்று சென்றுவிட்டதாகவும், அங்கு பல்வேறு பணிக்காக பணத்தை கொடுத்து ஏமாந்து அப்பாவி ஜனங்கள் புலம்பி வருவதாகவும் தற்போது. குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் தாசில்தார் பழனி ஏழை பாழைகளுக்கு பட்டையை அடித்து விட்டு சென்று விட்டதாக புலம்பித் தள்ளியதை நமது பத்திரிகையாளர் அங்கு சென்று வரும்போது காதால் கேட்க முடிந்தது

இதுகுறித்து, வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரெகுலர் தாசில்தாராகப் பணிபுரிந்து வரும் பழனி என்பவரிடம் குடியாத்தத்தில் நடந்த சம்பவத்தைக் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்க சென்றபோது. தாசில்தார் பழனியை சந்திக்க வரும் பத்திரிகையாளர்கள், மற்றும் ஜனங்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெளியவே மணிகணக்கில் அமர வைத்து அவமதிப்பதில் தாசில்தார் பழனி படுக்கில்லாடி என்று பேசுப் பொருளாக மாறியுள்ளது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வட்டாட்சியரை சந்திக்க தன் பெயரைக் குறிப்பிடாத பத்திரிக்கையாளர் வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகைப் புரிந்த போது அவரை அங்குள்ள அலுவலக உதவியாளர்(OA) மஞ்சுளா என்ற பெண் அனைவரையும் கூப்பிட்டு வெளியே உட்காருங்க தாசில்தார் சாப்பிடுகிறார் இப்பதான். சாப்பிட உட்கார்ந்து இருக்கிறார் ஐயா.. என்று கூறியபடியே இருந்து வருகிறார். அத்துடன். ஒன் ஹவர் கழித்து திடீரென்று தாசில்தார் பழனி தனது சேம்பரில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு செல்வதற்காக வெளியே வந்து கொண்டிருந்ததைப் பார்த்த பத்திரிகையாளர் சார் நான் உங்களை பார்க்க வந்துள்ளேன் அதனால், உங்கள் உதவியாளர் மஞ்சுளா என்பவர் ஒரு மணி நேரம் எதிரே உள்ள ரூமில் காக்க வைத்துள்ளார் என்று கூறியதற்கு பதில் அளித்த தாசில்தார் பழனி நீங்கள் என்னை பார்க்க வரவில்லை அந்த பொம்பளையை தான் பார்க்க வந்தீர்கள். ஆகையால் தான் நீங்கள் அந்த ரூமில் உட்கார்ந்து இருந்தீர்கள் என்று அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு வட்டத்தின் வருவாய்த் துறையின் உயர்மட்ட அதிகாரியான தாசில்தார் இதுபோன்று அநாகரிகமான பேச்சுக்களை பத்திரிகையாளரிடம் பேசுவது நியாயமா???

அதுமட்டுமின்றி தாசில்தாரை பார்த்து சில பல சான்றிதழ்களை பெற்று இந்திய ராணுவத்தில் சேருவதற்கான 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல மணி நேரம் காத்து கிடந்து அவர்களுக்கு தாசில்தாரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு. பின்னர் தாசில்தார் கலெக்டர் அலுவலகத்தில் மீட்டிங் என்ற பெயரில் கூறிவிட்டு வெளியே சென்றவாறு அந்த இளைஞர்கள் அவரை சுற்றி வளைத்து சார் எங்களுக்கு இராணுவத்தில் சேருவதற்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில் தங்கள் வாயிலாக வழங்க வேண்டிய சான்றிதழ்களை வழங்கினால், நாங்கள் ராணுவத்தில் சேருவதற்கு ஏதுவாக இருக்கும் என்று அந்த இளைஞர்கள் கேட்டதற்கு நீங்கள் நினைத்த டைமுக்கு வந்தால் நான் சான்றிதழ் கொடுக்க வேண்டுமா என்று அவர்களை அவமரியாதைக்கு உள்ளாக்கி காரில் ஏறி சென்று விட்டார் நேர்மை தவறாத வேலூர் தாசில்தார் பழனி என்று சொன்னால் அது மிகையாகாது… மக்கள் வரிப்பணத்தில் மாதம் மாதம் ஒன்றாம் தேதி ஆனால் வாங்கும் சம்பளத்திற்கு தன் அரசு கடமையை சரி வாரியாக செய்யாமல் அவரை நாடி வருபவர்களை அலட்சியப்படுத்துவது. அதே வேளையில், ருசி கண்ட பூனை மீண்டும் பாலை தேடி வருவது போன்றும், சொறி பிடித்தவன் கை சும்மா இருக்குமா என்ற பழமொழிக்கு ஏற்றாருவாறு வேலூரிலும் தனது கைவரிசையை அங்கு பல வருடங்களாக (சிப்பந்தி) வேலைக்கு பதில் தாசில்தார் வேலையும் சேர்த்து பார்த்து வரும் கோபியின் மூலம் லஞ்சக்கையூட்டைப் படுக்கச்சிதமாகப் பெற்று வருவதாக வேலூர் வட்டார தகவல்கள் பரவி வருகிறது அத்துடன்.
லஞ்சக்கையூட்டுக் கொடுத்தால் வேலைய உடனே முடித்துக் கொடுப்பது போன்ற காரியங்களை வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நித்தம் நித்தம் நடைபெற்று வருகிறதாம். எனவே இது குறித்து வேலூர் மாவட்டத்தின் 147-வது புதியதாகப் பொறுப்பேற்றுள்ள ஆட்சித் தலைவர் பி.எஸ். லீலா அலக்ஸ், ஐஏஎஸ்., அவர்கள். ஏழைகளுக்கு பட்டை போடுவதுடன்… பத்திரிகையாளர் ஒருவரையும், தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் (OA) அலுவலக உதவியாளர் மஞ்சுளா என்ற பின்னையும் இணைத்து அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ள தகவல்களை வட்டாட்சியர் அலுவலகத்தின் முகப்புக்களின் தூண்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்து நேர்மையை மறந்து ஆபாச வார்த்தைக்கு பெயர் போன தாசில்தார் பழனி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக பார்க்கப்படுகிறது.

இவர் ஏற்கனவே தனது சொந்த ஊரில் அதுவும் வருவாய்த்துறையில் பணிக்கு வருவதற்கு முன்பே அரசு டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வந்ததாகவும் எனவே அவர் டபுள் மீனிங் பேச்சுக்களில் பெயர் போனவர் என்று தற்போது இவரை பற்றி விசாரித்த போது தகவல்கள் கசிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.