Archives
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
WIN
𝙅𝙪𝙨𝙩_𝙄𝙣
பேரணாம்பட்டு அருகே சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டானா? போலீஸ் தீவிர விசாரணை!வேலூர்,ஜூன்16-வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஆஷா. இவர்கள் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தங்களுடைய ஒரே மகன் முகிலன் (6) பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார். இந்நிலையில் பாட்டி விஜயா மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வருவாராம். இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு தனது பேரன் முகிலன் என்பவரை நரபலி கொடுத்துவிட்டு ஆங்காங்கே பொருள்களை சிதறடித்து வைத்துள்ளார் விஜயா. சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட தகவல் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து மேல் பட்டி போலீசார் விரைந்து சென்று நரபலி கொடுக்கப்பட்ட சிறுவன் முகிலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதைதொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் விஜயா மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வருவது உறுதியானது. இதையடுத்து உண்மையிலேயே சிறுவன் நரபலி தான் கொடுக்கப்பட்டானா? அல்லது வேறு ஏதாவது தகவல்கள் உள்ளனவா? என்று தீவிர புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட விஷயம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வட மாநில தொழிலாளர் போராட்ட நிதியாக ரூ.15 லட்சம் வழங்கிய சிஐடியு தமிழ் மாநிலக் குழு
தமிழ்நாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் மருத்துவ அணியும் R.S.R.M. மகப்பேறு மருத்துவமனையும் இணைந்து இன்று 14:06:26 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் அதிகமான மக்கள் தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கினார்கள்
மேனல்லூர் அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கிய த.வெ.க.,வின் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் !செய்யாறு, ஜூன் 15 -மேனல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில், நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய கம்ப்யூட்டரை த.வெ.க.,வின் இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் வழங்கினார்.திருவண்ணாமலை மாவட்டத்தின் கடை கோடியில் அமைந்துள்ளது மேனல்லூர் கிராமம். இங்கு அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மேனல்லூர், பகவந்தபுரம், பூனைத்தாங்கல், சுருட்டல் உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த 370 ஏழை மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியரியராக உள்ள தயாளன். இந்த பள்ளியில் பயின்ற பழைய மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை சந்தித்து, பள்ளிக்கான வளர்ச்சி பணிகளை செய்து வருகிறார்.அந்த வரிசையில் மேனல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( 37 ). இவர், தமிழக வெற்றி கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்தின் இளைஞர் அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். திருவண்ணாமலை த.வெ.க.,வின் கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமாரின் ஆலோசனை பேரில், மேனல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஏழை மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பம் கொண்ட கம்ப்யூட்டரை பள்ளிக்கு மணிகண்டன் வழங்கினார். தலைமை ஆசிரியர் தயாளன், ஆசிரியர்கள், மாணவ – மாணவிகள், ஒன்றிணைந்து, மணிகண்டனுக்கு நன்றியை தெரிவித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் தயாளனின் இதுபோன்ற முன்னெடுப்பால், மேனல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையாக புதுப்பொலிவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
மேனல்லூர் அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கிய த.வெ.க.,வின் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் !செய்யாறு, ஜூன் 15 -மேனல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில், நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய கம்ப்யூட்டரை த.வெ.க.,வின் இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் வழங்கினார்.திருவண்ணாமலை மாவட்டத்தின் கடை கோடியில் அமைந்துள்ளது மேனல்லூர் கிராமம். இங்கு அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மேனல்லூர், பகவந்தபுரம், பூனைத்தாங்கல், சுருட்டல் உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த 370 ஏழை மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியரியராக உள்ள தயாளன். இந்த பள்ளியில் பயின்ற பழைய மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை சந்தித்து, பள்ளிக்கான வளர்ச்சி பணிகளை செய்து வருகிறார்.அந்த வரிசையில் மேனல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( 37 ). இவர், தமிழக வெற்றி கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்தின் இளைஞர் அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். திருவண்ணாமலை த.வெ.க.,வின் கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமாரின் ஆலோசனை பேரில், மேனல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஏழை மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பம் கொண்ட கம்ப்யூட்டரை பள்ளிக்கு மணிகண்டன் வழங்கினார். தலைமை ஆசிரியர் தயாளன், ஆசிரியர்கள், மாணவ – மாணவிகள், ஒன்றிணைந்து, மணிகண்டனுக்கு நன்றியை தெரிவித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் தயாளனின் இதுபோன்ற முன்னெடுப்பால், மேனல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையாக புதுப்பொலிவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
வேலூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட கைத்தறி துறை அமைச்சர் விஜய பாலாஜி குடியாத்தம் பகுதியில் திடீர் ஆய்வு!வேலூர், ஜூன் 15-வேலூர் மாவட்டம், குடியாத்தம் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமானமிகவும் பயனுள்ளதுமான கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மனுவாக ஆய்வு செய்ய வந்த அமைச்சர் விஜய பாலாஜியிடம் குடியாத்தம் புதிய நீதிக்கட்சி நகர செயலாளர் கைத்தறி காவலன் ரமேஷ் வழங்கினார்.(1) குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.(2) குடியாந்தம் பிச்சனூர் கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம். எனவே மேற்கண்ட பள்ளியை தரம் உயர்த்தி தந்து எங்கள் பகுதியை கல்வி மேம்பட உதவி செய்ய வேண்டும் .(3) கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கொடுக்கப்பட்டுள்ள நெசவு கூலியை குறைத்துள்ள தனியார் மண்டி முதலாளிகளை அழைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.4) குடியாத்தம் டாக்டர் அம்பேத்கர் சிலை மற்றும் அதனைச் சுற்றி 4 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள மதுபான டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் .5). குடியாத்தம் ஆர். எஸ். ரோட்டில் உள்ள பிரம்மாஸ் பள்ளி மற்றும் சில தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டணத்தை விட கூடுதலாக அதிக மடங்கு வசூல் செய்து வரும் பள்ளிகளை கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மேற்கண்ட குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு உதவிட வேண்டும்.6) குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வரும் குழாய்களில் உப்பு நீர் கலந்து குடிநீரை வீணாக்கி வருகிறது. இந்த தண்ணீரை பொதுமக்கள் குடிக்க வேண்டிய அவலநிலை நிலவி வருகிறது.. மேலும் மூன்று வருடங்களுக்கு முன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் நகராட்சி முலம் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் இரண்டு வருடமாக மேற்கண்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுவது இல்லை. எனவே எங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க அமைச்சர் வழி வகை செய்ய வேண்டும். மேற்கண்ட மனுவில் உள்ள உண்மை நிலையை கண்டறிந்து மக்களுக்காக செயல்படும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் நல்லாட்சியில் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யுமாறு தங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!வேலூர் ,ஜூன்15-வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஜூன் மாத (வைகாசி) கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடைவிடாது ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இந்த நன்னாளில் முருக பக்தர்களுக்கு வேலூர் செங்குட்டை தொழிலதிபர் அச்சுதன் -அமுதா தம்பதியர் அன்னதானம் வழங்கினர். இந்த அன்னதானத்தில் கேசரி மற்றும் மதிய உணவு தயிர் சாதம், ஊறுகாய் வழங்கப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் வரிசையில் நின்று இந்த அன்னதானத்தை பெற்று உண்டு மகிழ்ந்து தங்களது பசியாற்றி கொண்டனர்.இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அச்சுதன் தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக முருகன் திருவுருவப் படத்துக்கு மலர்களால் அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. இதையடுத்து அன்னதானம் நடந்தது. இந்த அன்னதானத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அச்சுதன் -அமுதா தம்பதியருடன் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் விமரிசையாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் அச்சுதனுக்கு உதவியாக தெலுங்கானா நக்சலைட் தேடுதல் வேட்டை பிரிவு உதவி ஆய்வாளர் ரவி, தொழிலதிபர் நந்தகுமார், அதிமுக பிரமுகர் சிவாஜி பேருதவி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காட்பாடி காங்கேயநல்லூர் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி: கண்டுகொள்ளாத வேலூர் மாநகராட்சி நிர்வாகம்!வேலூர், ஜூன் 15-வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி காங்கேயநல்லூர் ரோடு, அவ்வையார் தெருவில் மழைநீர் வடிய வழியின்றி சில தெருக்களில் குளம் போல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்ல கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாகஇப்பகுதியில் உள்ள கற்பக விநாயகர் கோவில் எதிரே நேற்றுமுன்தினம் இரவு பெய்த கன மழையினால் மழை நீர் குளம் போல் அங்கே தேங்கியுள்ளது. மழைநீர் தங்குதடையின்றி செல்ல வடிகால் வசதி இல்லாத நிலை இங்கு உள்ளது. பொதுமக்கள் படும் பாட்டை காட்பாடி எம் எல் ஏ மருத்துவர் என்ற போதிலும் கண்டும் காணாமல் அலட்சியமாக நடந்து கொள்கிறார். வேலூர் மாநகராட்சி நிர்வாகமும் எம்எல்ஏ வுக்கு ஒரு படி மேலே செயல்படுகிறது. இப்படி போட்டி போட்டு கொண்டு மக்கள் பணியை செய்யாமல் தான் தோன்றித் தனமாக மாநகராட்சி நிர்வாகமும், தொகுதி எம்எல்ஏவும் செயல் படுவது ஏற்புடையதாக இல்லை.இப்படி ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு வைக்கிறார் எம் எல் ஏ மருத்துவர் சுதாகர் என்று சொன்னால் அதுதான் நிதர்சனம்.இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.எனவே, வேலூர் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு ஔவையார் தெருவில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முறையான வடிகால் வசதியை அமைத்து பொதுமக்கள் நிம்மதியாக வாழ வழி வகை செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காணும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் சி ஐ டி யுபொது தொழிலாளர்சங்கத்தின் நிர்வாகிகள்தோழர்பாஷாஹபிபுல்லாமுகமது அலி ஜின்னாசானவாஸ்ஆகியோர் குன்னூர் ரயில் நிலையத்தில் சந்தித்து மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேம்பாடு சம்பந்தமாகவும் கூடுதல் ரயில் கோரியும் ஏற்கனவே நமது கோரிக்கையின் அடிப்படையில் ரயில்வே நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் கோவை மெமோ ரயில் கூடுதல் பெட்டிகள் இணைக்க கோரியும் காட்டூர் ரயில்வே கேட் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றி தெரிவித்தும் தொடர்ந்து அப்பகுதி போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் சென்று வர வழிவகை செய்யவும் நமது குழு தோழர்கள் மூலமாக கோரிக்கை வைத்ததுடன் நேரிலும் எடுத்துப் கூறினோம் தமிழ் தெரியாத பொது மேலாளர் அவர்கள் மொழி பெயர்ப்பாளர் ஒருவரை வரச் சொல்லி நாம் கூறிய கருத்துக்களை பொறுமையாக செவியேற்றதுடன் மேட்டுப்பாளையம் என்றதும் காட்டூர் ரயில்வே கேட் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததா என்று கேட்டார் நாமும் நன்றி கூறினோம் மொழிபெயர்ப்பாளரிடம் நமது கோரிக்கைகளை கேட்டு அறிந்து நமது கோரிக்கைகளை பதிவு செய்ய சொன்னதுடன் உடனடியாக தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கவும் கூறி அறிவுறுத்தினார் நமது கோரிக்கைகளை செவிமடுத்த தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் மனம் நிறைந்த நன்றியினை தெரிவித்தனர்
1
…
16
17
18
…
119