தீபாவளி பண்டிகையை பசித்தவர்களுடன் கொண்டாடுவது என பெரியநாயக்கன்பாளையம் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகளின் சார்பாக நூறு ஏழை மக்களுக்கு பண்டிகை உணவு வழங்கப்பட்டது.

8.11.2026 ஞாயிறு மதியம் தீபாவளி பண்டிகையை பசித்தவர்களுடன் கொண்டாடுவது என பெரியநாயக்கன்பாளையம் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகளின் சார்பாக நூறு ஏழை மக்களுக்கு பண்டிகை உணவு வழங்கப்பட்டது. பேரூராட்சி கவுன்சிலர் தோழர் நவ.சிவராஜன் அவர்கள் தவைமையில் கிளை செயலாளர்கள் ஆர்.கருப்புசாமி.கே.வெங்கிடசாமி. எஸ்.இன்பவள்ளி ஆகியோருடன் தோழர்கள் ஆர்.ரேணுகாதேவி. வி.சுசீலா. வேலுசாமி நவநீதன். அசோக்குமார். எஸ்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி மகிழ்வுடன் நிறைவடைந்தது.