ரோட்டரி மாவட்டம் 3203-ஐச் சேர்ந்த ரோட்டரி கிளப் ஆஃப் பெரியநாயக்கன்பாளையம் நார்த் சங்கத்தின் மாவட்ட ஆளுநர் வருகை மற்றும் பாராட்டு விழா பெரியநாயக்கன்பாளையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் டிஎம்
கே பூபதி. அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பொதுமக்களுக்கான பல்வேறு நாட்டு நலப்பணித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்:
சுகாதாரம்: அரசுப் பள்ளிகளுக்கான நவீன கழிவறை வசதிகள் அமைத்தல்.
மருத்துவம்: புற்றுநோய் சிகிச்சை மையம் (Cancer Center) சார்ந்த மருத்துவ உதவிகள் வழங்குதல்.
கல்வி: மாணவ, மாணவிகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கான கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்குதல்.
சுற்றுச்சூழல் & உயிரினப் பாதுகாப்பு: பறவைகளுக்கான கூடுகள் மற்றும் பராமரிப்பு உதவிகள் அமைத்தல்.
இவ்விழாவில் சங்கத்தின் தலைவர் ரோட்டேரியன் முகமது ஹனீப், செயலாளர் ரோட்டேரியன் ராஜசேகர், பொருளாளர் ரோட்டேரியன் மகேந்திரன் மற்றும் மாவட்ட ரோட்டரி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.












Leave a Reply