வேலூர்,அக்.31-
சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் (டிஆர்எம்) சைலேந்திர சிங் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜோலார் பேட்டை சந்திப்பு வரை சிறப்பு ஆய்வு மேற்கொண்டார்.
அவர் ஸ்பிக் (SPIC – Inspection Car) எனப்படும் அதிநவீன ஆய்வுக் காரில் பயணித்து ரயில் வழித்தடங்கள் மற்றும் ரயில் நிலையங்களை விண்டோ இன்ஸ்பெக்ஷ்ன் Window Inspection முறையில் பார்வையிட்டார்.
இப்பயணத்தின் போது காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள், நடை மேடைகளில் உள்ள டைல்ஸ் அமைப்புகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து ரயிலில் இருந்தபடியே நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காட்பாடியைத் தொடர்ந்து ஜோலார் பேட்டை வரை சென்று அவர் தனது ஆய்வை நிறைவு செய்தார்.












Leave a Reply