வேலூர், அக். 28-
வேலூர், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிகளைச் சீரமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் து.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பொறுப்பு குணசேகரன், தேர்தல் வட்டாட்சியர் ரமேஷ், வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் வாஹித்பாஷா, வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் பி.பி. சந்திரபிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.











Leave a Reply