வேலூரில் வைட்டமின் ‘ஏ’ குறைபாடு தடுப்புத் திட்டம் தொடக்கம்: ஆட்சியர் பங்கேற்பு!

வேலூர், அக்.27-
வேலூர் சத்துவாச்சாரி, ராகவேந்திரா நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில், 6 மாதம் முதல் 60 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டைத் தடுக்கும் தேசியத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், வைட்டமின் ‘ஏ’ திரவத்தை வழங்கித் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.ம.வினோத் கண்ணன், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் விஜய் சந்திரன், துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.