தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிக்கையாளர் சங்க வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிக்கையாளர் சங்க வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கே. வி. குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் இந்திர குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் வீரராகவன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் சங்க வேலூர் மாவட்டத்தில் தற்காலிகமாக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது. மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சங்கத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் வேலூர் மாவட்ட தலைவர் இந்திரகுமார்
புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் சுகனேஸ்வரன், மாவட்ட பொருளாளர் சிதம்பரம், சிறப்பு அழைப்பாளர் மாநில பொதுச் செயலாளர் வீரராகவன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.