வேலூர் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் மாதிரி பத்திரப் பதிவு மையம் தொடங்க கடும் எதிர்ப்பு – கவன ஈர்ப்புப் போராட்டம் மற்றும் சங்கத்தினர் கடும் கண்டனம்!

வேலூர், அக்.27-
வேலூர் மாவட்டத்தில், வேலூரில் மாதிரி பத்திரப் பதிவு மையம் தொடங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தினர் சார்பில் 26.10.2026 அன்று கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தினர்.
இதில், தனியார் மையம் தொடங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், பத்திரம் எழுதுவோரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் சங்கத்தினர் வலியுறுத்தினர். மாதிரி பத்திரப் பதிவு மையம் தொடங்கப்பட்டால், பத்திரம் எழுதுவோரின் தொழில் பாதிக்கப்படுவதுடன், அவர்களைச் சார்ந்துள்ள குடும்பங்களும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் என அவர்கள் அப்போது தெரிவித்தனர்.சங்கத்தினரின் முக்கியக் கோரிக்கைகளாவன:

பத்திரப் பதிவு நடைமுறைகளை மேம்படுத்தி, பொதுமக்களுக்குச் சிறந்த சேவை வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும், தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் மாதிரி பத்திரப் பதிவு மையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்.

பத்திரம் எழுதுவோரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

மாதாந்திர வருமானத்தை நம்பியுள்ள குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.