அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் ரத்ததான முகாம்!

வேலூர், அக்.26-
அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் 119 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு நிறுவனர் ம.சி.கார்த்திக்.ஜி தலைமை வகித்தார்.மாநிலத் தலைவர் ராம .சரவணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக டி.ஜே. கோபி சங்கர் மற்றும் அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் பொறுப்பாளர்கள் எஸ். ரமேஷ், டி. ஜே. ரமேஷ், ஜி. கிருஷ்ணமூர்த்தி, ஜி. வினோத்குமார், எஸ்.சந்தோஷ்குமார் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர். முகாமில் ரத்ததானம் வழங்கிய நல்ல உள்ள க்களுக்கு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தங்களது நன்றியையும், பாராட்டுகளை தெரிவித்து மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.