வேலூர், அக்.25-
வேலூர் ஆபீசர்ஸ் லைன் பகுதியில் அமைந்துள்ள ஊரிசு கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை விஐடி வேந்தர் டாக்டர் ஜி. விசுவநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில் வேலூர் பேராயர் சர்மா நித்தியானந்தம், கல்லூரி முதல்வர் ஆனி கமலா, ஆடிட்டர் பாண்டியன், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலையரசன், கலைமகள் டிரான்ஸ்போர்ட் இளங்கோவன் மற்றும் அண்ணாமலையார் ஹோட்டல் உரிமையாளர் இளங்கோ, முன்னாள் காவல்துறை தலைவர் ராஜேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பாமக என். டி. சண்முகம், கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள் ஸ்டான்லி ஜோன்ஸ், டேனியல் எழிலரசு உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள், சங்க நிர்வாகிகள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரி கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, ஒருவரையொருவர் சந்தித்து மகிழ்ந்தனர். முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இச்சந்திப்பு விழாவில் பலர் பங்கேற்று நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.











Leave a Reply