ஒடுகத்தூர் உயர்மட்ட மேம்பாலப் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

வேலூர், அக்.22-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நேமந்தபுரம் சாலையில் ரூ.8.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஒடுகத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் குமார், அரசு துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.