வேலூர் மாவட்டத்தில் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளைப் பிரிப்பது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

வேலூர், அக்.22-
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வேலூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது, 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளைப் பிரித்தல், வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் மற்றும் கட்டடம் மாற்றம் செய்வது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி.எஸ்.லீலா அலெக்ஸ், தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. து.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பொறுப்பு குணசேகரன், தேர்தல் வட்டாட்சியர் ரமேஷ், அரசு துறை சார்ந்த பல்வேறு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.