விடுதலை போராட்ட மாவீரன் அழகு முத்துக்கோனின் திருவுருவப் படத்திற்குதரணிவேந்தன் எம்.பி., – முன்னாள் எம்.எல்.ஏ., ஜோதி மாலை அணிவித்து மரியாதை !செய்யாறு, ஜூலை 12 -தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட ‘மாவீரன் அழகுமுத்துக்கோனின்’ 269வது பிறந்தநாளையொட்டி, வெம்பாக்கத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி ஆகியோர் தலைமையில் தி.மு.க.,வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.தமிழகத்தைச் சேர்ந்தவர் அழகு முத்துக்கோன். இவர் கடந்த ‘200 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னோடி மாவீரராக திகழ்ந்தவர். இவரது 269வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தி.மு.க.,வின் மத்திய ஒன்றியம் சார்பில், மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில், இவரது திருவுருவப் படத்தை மலர்களால் அலங்கரித்து, நிகழ்ச்சி ஏற்பாடுகளை வெம்பாக்கம் யாதவ சமூதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பூபாலன், பால்காரர் முனியன், தட்சிணாமூர்த்தி, மணி பிள்ளை, நாகூரான், கமல் ஆகியோர் விமரிசையாக செய்திருந்தனர்.ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி ஆகியோர் தலைமையில் தி.மு.க.,வினர் அழகு முத்துக்கோனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர்களான ஜே.சி.கே.சீனிவாசன், தினகரன், வெம்பாக்கம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜி, மாவட்ட பிரதிநிதிகள் பெருமாள், சிவப்பிரகாசம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.