கந்துவட்டி விடும் தமிழ்நாடு அரசு மின்வாரிய ஊழியர் :வீடு புகுந்து ஆட்டோ தொழிலாளிக்கு கொலை மிரட்டல்!வேலூர், ஜூலை 6-வேலூரை சேர்ந்தவர் அருள் பிரகாசம். இவர் தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் உப தொழிலாக கந்துவட்டி விடும் தொழிலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்வதை காட்டிலும் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து விட்டு அதை திரும்ப வசூல் செய்வதும், கொடுப்பதும்தான் இவரது 24 மணி நேர வேலையாக இருந்து வருகிறது. இவர் தொமுசவில் இருந்து கொண்டு திமுகவின் பெயரை தவறாக பயன்படுத்தி இவர் முறைகேடாக நடந்து வருவதாக பொதுமக்கள் தரப்பிலும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் கூறப்படுகிறது. இதே போன்று வேலூர் பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்த தேவசகாயம் என்பவருக்கு கந்துவட்டிக்கு ரூபாய் 5 ஆயிரத்தை கொடுத்துவிட்டு தற்போது ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்று அடாவடியாக அவரிடம் பணம் கேட்பது, தொந்தரவு செய்து வருவதுடன் அவரது வீட்டிற்கு மது போதையில் சென்று நள்ளிரவு 12 மணி அளவில் தகராறு செய்வது, நான் கதவை இழுத்துப் பூட்டி விட்டு சென்று விடுவேன் என்று அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பது என்று சில விருப்பத்தகாத செயல்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார. அவர் மது போதையில் செல்லும்போது தனக்கு துணையாக மூன்றிலிருந்து நான்கு பேர் வரை அடியாட்களை தன்னுடன் அழைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அவர் மீது ஏற்கனவே வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை வட்டாரம் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள சிவராமன் கந்துவட்டி கொடுமையில் இருந்து ஆட்டோ தொழிலாளியை காப்பாற்ற கடும் நடவடிக்கையை விரைந்து எடுக்க உத்தரவிட வேண்டும் என்பதே தேவசகாயம் குடும்பத்தினரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் முதியவர்கள் மற்றும் பெண்கள், இளம் பெண்கள் உள்ள வீட்டிற்கு வந்து அந்த வீட்டின் கதவைத் தட்டி இவ்வாறு ரகளையில் ஈடுபடுவதை தொடர்ந்து வழக்கமாக வைத்துள்ளார் இந்த அருள் பிரகாசம். அத்துடன் இல்லாமல் ஒரு படி மேலே சென்று மதுபோதையில் இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். குறிப்பாக சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தேவசகாயம் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த கொடூர தாக்குதலுக்கு பின்புலமாக கிருஷ்ணமூர்த்தி செயல்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆட்டோ ஓட்டுநராக சித்தேரி மற்றும் பாகாயம் பகுதியில் வேலை செய்து வருகிறார். இவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் விட்டுவி ட்டது. இதற்கு அடிப்படை காரணம் என்றும் கூறப்படுகிறது .தட்டிகேட்டால் இப்படி அடியாட்களை ஏவி விட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு வழக்கின் பின்னணியில் பல்வேறு முன்விரோத செயல்கள் பின்புலமாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது .காவல்துறை இதுபோன்ற கந்துவட்டிக்காரர்களை கைது செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பகது வெட்கக்கேடான விஷயமாக உள்ளது பொதுமக்களுக்கு உதவ வேண்டியவர்கள் இது போன்ற கட்டப்பஞ்சாயத்தை செய்பவர் கந்துவட்டி விடுபவருக்கு நாசக்கரம் நீட்டுகிறது இது மிகவும் நாட்டில் ஆபத்தான நிலைக்கு கொண்டு போய்விடும் என்பதும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழ விடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. நகரில் ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக வேலூர் தெற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து அருள் பிரகாசத்தை கைது செய்து உரிய விசாரணை நடத்தி அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் இவர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறி உள்ளது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமனின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.