மேட்டுப்பாளையம் ஜமபந்தி நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யு தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு மக்கள் நலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்துநிர்வாகிகள் மனு அளித்தனர்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமபந்தி நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் சி.ஐ.டி.யு தாலுக்கா பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள்தோழர
கலந்து கொண்டு, பொதுமக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய கோரிக்கைகளை நேரில் வலியுறுத்தினர்.
அந்த மனுவில் குறிப்பாக பவானி நதி தொடர்ந்து மாசுபடுவது குறித்து உடனடி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் முறையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் மேட்டுப்பாளையம் நகரில் தூய்மை பணிகளை தீவிரப்படுத்தி, கழிவுநீர் மேலாண்மை மற்றும் தினசரி சுகாதார நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டது.
அதேபோல் வன பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக, வேழம் இயலியல் பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் எனவும், மனித–விலங்கு மோதல் தடுப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும், நிலம் இல்லாத குடும்பங்களை அடையாளம் கண்டு அரசு திட்டத்தின் கீழ் வீட்டுமனை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள்தோழர் சானவாஸ்.
முகமது அலி ஜின்னா.
மனசே சாமுவேல்.
குணசேகரன்.
நாகஜோதி.
தௌலத் நிஷா.
லூயிஸ்.
பாரத் சாரதி
உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டு, வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் மனுவை வழங்கினர்.
அவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக விளக்கம் அளித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர். ஜமபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்கள் பிரச்சினைகள் நேரடியாக முன்வைக்கப்பட்டதால், பல்வேறு தரப்பினரும் இதை கவனிக்கத்தக்க நடவடிக்கையாக பாராட்டினர்.