இதில், 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் இரண்டாம் நாளில் பொன்பரப்பி உள்வட்டம், சிறுகளத்தூர், பொன்பரப்பி, நாகல்குழி, பரணம், கிளிமங்கலம், இரும்புலிக்குறிச்சி, கீழமாளிகை, பிலாக்குறிச்சி, சிறுகடம்பூர் ஆகிய 09 கிராம பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் என மொத்தம் 251 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பொதுமக்கள் மனுக்களின் மீது தீர்வுகண்டு பட்டா மாற்றம் ஆணைகள் மற்றும் மின்னணு குடும்ப அட்டை முகவரி திருத்தத்திற்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களின் மீது விரைவாக உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காணுமாறும், கிராம கணக்குகள் தொடர்பான கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கணக்குப் பதிவேடுகளை முறையாக பதிவு செய்து பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். முன்னதாக நில அளவை அலுவலர்கள் பயன்படுத்தும் நில அளவை கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.











Leave a Reply