அரியலூர் மாவட்டம், அரியலூர் சத்யாநகரில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, ஆய்வு மேற்கொண்டார்.

அரியலூர் – ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவியர் விடுதியில் உள்ள மாணவியர்களின் நலன் கருதி விடுதிகளைப் இடமாற்றம் செய்ய அறிவுறுத்தினார்.

அரியலூர், ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவியர் விடுதியின் இடமானது ஒப்பளிக்கப்பட்ட மாணவியர்களின் எண்ணிக்கையான 100 மாணவியர்கள் தங்கி பயில்வதற்கு உகந்த போதிய இடவசதியின்மை மற்றும் மாணவியர்களின் நலன் கருதி மேற்படி மாணவியர் விடுதியினை அரியலூர் செந்துறை ரோடு சத்யா நகரில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியின் இடத்திற்கு மாற்றம் செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்றையதினம் சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியினை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.