
வேலூர் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை : ரூ. 32 ஆயிரம் பறிமுதல்!வேலூர், ஜூன் 5-வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆரணி சாலை வேலப்பாடியில், வேலூர் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவுத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்சம் தலை விரித்து ஆடியது. இந்த அலுவலகத்தை பல்வேறு தேவைகளுக்காக நாடிச் செல்லும் பொதுமக்களிடம் பகல் கொள்ளை போல பணத்தை பறித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகார்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்ற வண்ணம் இருந்தது. இந்நிலையில்இந்த அலுவலகத்தில் வேலூர் மாவட்ட ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்குனரக துறை வேலூர் டிஎஸ்பி சங்கர், இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை யில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 32 ஆயிரம் ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர் இது தொடர்பாக வேலூர் சார் பதிவாளர் பத்மபிரியாவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனி அறையில் வைத்து துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply