தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை வேலூர் மாவட்டம் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எண் 45: கே. வி. குப்பம் மற்றும் எண் 46: குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.