Archives
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Year:
2026
தேனி- அரசு பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் உயிரிழந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி :
தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்த நபரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்– பெரும் விபத்து தவிர்ப்பு!வேலூர், ஜூன் 12-காட்பாடி அருகே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்த நபரை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியதால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.நேற்று (11.06.2026) அதிகாலை சுமார் 2.40 மணியளவில், லத்தேரியில் Track Packing Machine பணியை முடித்துவிட்டு திரும்பிய SSE/P.Way விஜய் குமார், கி.மீ. 130/27 பகுதியில் கீழ்பாதை தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பதைக் கண்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். முதலில் கி.மீ. 137 என தகவல் கிடைத்த நிலையில், ASI/RPF காட்பாடி பி. ஆர். முரளி சம்பவ இடத்தை உறுதி செய்து உடனடியாக RRI கேபினை தொடர்புகொண்டு, ஜோலார்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் எண் 13351 தன்பாத்–ஆலப்புழா எக்ஸ்பிரஸை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.பின்னர் ASI பி. ஆர். முரளி மற்றும் தலைமைக் காவலர் எம். சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்டவாளத்தின் மீது தலை வைத்து படுத்திருந்த நபரை பாதுகாப்பாக அகற்றி அவரது உயிரைக் காப்பாற்றினர். அதன் பிறகு ரயில் தனது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டது.மீட்கப்பட்ட நபர் பி. ராமச்சந்திரன் (46), வேலூரைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவருக்கு ஆரம்பகட்ட மருத்துவ உதவி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டதுடன், மேல்கட்ட நடவடிக்கையாக மனநல பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் காட்பாடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
பேரணாம்பட்டில் த.வெ.க.சார்பில் பொதுமக்களுக்கு இலவச நீர் மோர், குளிர்பானங்கள் வழங்கல்: எஸ். நாசிர் அஹமத் பங்கேற்பு! வேலூர்,ஜூன் 12-தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், வேலூர் மேப்பாஷமாவட்ட த.வெ.க. செயலாளர் ஆர்.வேல்முருகன் ஆகியோரின் அறிவுறுத்தலின், பேரணாம்பட்டு நகர தமிழக வெற்றி கழகம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு பேரணாம்பட்டு பொதுமக்களுக்கு நீர். மோர், குளிர்பானங்கள் வழங்கும் விழா தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றே த.வெ.க. செயலாளர். எஸ். நாசிர் அஹமத். தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் குளிர்பானங்களை வழங்கினார். பேரணாம்பட்டு வடக்கு நகர த.வெ.க. நிர்வாகிகள் இணைச் செயலாளர் மௌலானா யூசுப், பொருளாளர். எம். பாக்கியராஜ். துணைச் செயலாளர். எஸ். நவாஸ். சுஹேல். நகர செயற்குழு உறுப்பினர்கள். ஷகீல் . இஸ்மாயில். நமீத் ரியாஸ்.தசீன்.தஹும் நாஜூம். ஆசிப். ஷமில். சாந்தா சிக்கந்தர்.கனி ரஃபி.தன்சீம்.அகில்ஷா பாபு. மாணவரணி அமைப்பாளர் வசீம் .நியாஸ். உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் டி.வி.ஷமீல் அஹமத். நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள களப்பயிற்சியாளர்கள் 22 நபர்களுக்கு 11.06.2026 முதல் 13.06.2026 வரையிலான மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, தொடங்கி வைத்தார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை செய்யாறு கால்பந்தாட்ட வீரர்கள்தொலைக் காட்சியில் கண்டுகளிப்பு!செய்யாறு, ஜூன் 12 -உலகக் கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கிய முதல் ஆட்டத்தை செய்யாறு கால்பந்தாட்ட வீரர்கள் கண்டுகளித்தனர்.உலகில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கொண்டாடப் பட்டு வருவது உலக கால்பந்து போட்டிகள். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கால்பந்து போட்டி கடந்த 1930ம் ஆண்டு முதன் முதலில் தொடங்கியது. இந்தப் போட்டிகளில் கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் நாடுகள் மட்டுமே தகுதி பெறுகின்றன. இதற்காக பல்வேறு சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு தகுதிவாய்ந்த அணிகள் தேர்வு செய்யப்படுகின்றன.அந்த வகையில் நடப்பாண்டு 23வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இந்தப் போட்டிகளை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகள் சேர்ந்து நடத்தப்படுகின்றன. இதற்கான தொடக்க விழா நேற்று இரவு பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்தப் போட்டியில் 48 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.இவ்வாண்டுக்கான முதல் போட்டி மெக்சிகோ – தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் மோதியது.திருவண்ணாமலை மாவட்டத்திலேயே செய்யாறு கால்பந்து போட்டியில் சிறந்து விளங்குகிறது. செய்யாறில் மட்டும் 200க்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட வீரர்கள் உள்ளனர். இவர்கள் பள்ளி – கல்லூரி பருவங்களில் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள் குழுக் குழுவாக ஒன்று சேர்ந்து தங்களது வீடுகளில் நேற்று உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டி தொடக்க விழாவையும், முதல் போட்டியையும் கண்டுகளித்தனர்.இது குறித்து மாநில அளவில் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்என்.தண்டபாணி ( 57 ). கூறியதாவது; கால்பந்தாட்டம் என்றாலே எனது உயிர். கடந்த 1990ம் ஆண்டு நான் செய்யாறு அரசு ஆண்கள் பள்ளியில் படித்திருந்த போது எனது தலைமையில் கால் பந்தாட்ட குழு மாநில அளவில் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றோம். இதனால், செய்யாருக்கும் – அரசு பள்ளிக்கும் பெருமையை சேர்த்து கொடுத்தோம். செய்யாறில் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது இளைஞர்கள் கால்பந்தாட்டத்தை ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். ஒரு மாதத்துக்கு மேல் நடைபெற உள்ள ‘உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள்’ எங்களுக்கு தினம் தினம் ஒரு விழாவாகவே நாங்கள் கண்டுகளிக்கப் போகிறோம். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் இந்தியா இன்னும் தகுதி பெறவில்லை என்பதுதான் எங்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது; ‘இவ்வாறு கால்பந்தாட்ட வீரர்என்.தண்டபாணி கூறியுள்ளார்.
கோவை மாநகர வட்டம் நகரிய கோட்டம் தண்ணீர் பந்தல் பிரிவு உதவி செயற்பொறியாளராக உயர்நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் திருமதி ஷோபனா நியமனம் இன்று பிரிவு அலுவலகத்தில் பதவி ஏற்று கொண்டார்
காட்பாடி வட்டாட்சியராக பொறுப்பேற்று கொண்டார் மகேஸ்வரி.
அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார்துறை வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
யூடியூபர் முக்தார் கைது
சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் சின்னையா பள்ளி அருகே சுமார் 15அடி முதல் 20 அடி அகல நடைபாதை அமைக்க பட்டுள்ளது.
1
…
18
19
20
…
85
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.