தற்போது 19.06.2026 (வெள்ளிக்கிழமை) அன்று ஆண்டிமடம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறவுள்ள சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர்.

இடம் : அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், ஆண்டிமடம்.
நாள் : 19.06.2026 (வெள்ளிக்கிழமை)
நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை
இம்முகாமில் கலந்து கொள்வதற்கு 18 வயது முதல் 45 வரையிலான 8th Pass, 10th, 12th, ITI, Diploma, Any Degree, B.E, Agri, Paramedical, Nursing மற்றும் Hotel Management படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இந்த வாய்ப்பினை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, தெரிவித்துள்ளார்.










Leave a Reply