வேலூர், அக்.10-
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி.எஸ். லீலா அலெக்ஸ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தேர்தல் வட்டாட்சியர் ரமேஷ், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், காங்கிரஸ் கமிட்டி மாவட்ட துணைத் தலைவர் பி.பி. சந்திரபிரகாஷ், பாஜக மாவட்ட துணைத் தலைவர் சக்கரவர்த்தி, முன்னாள் அதிமுக பிரமுகர் நாகு, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நாகராஜ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.











Leave a Reply