வேலூர்,அக்.8-
ஆம்பூர் பத்திரப்பதிவு சார் – பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்ய அதிக கையூட்டு கேட்பதாக புகார் கூறி முன்னாள் நகர மன்ற உறுப்பினரும், சமூக ஆர்வலருமான இ. சுரேஷ்பாபு சங்கு ஊதி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு காரணம் ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லும் பொது மக்களிடம் ஒருமையில் பேசுவது, அவர்களை நாயை விட கேவலமாக விரட்டுவது என்று நடந்து கொள்கிறார் சார்பதிவாளர். அத்துடன் பத்திரம் பதிவு செய்ய செல்பவர்களிடம் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி இங்கெல்லாம் ஆன்லைனில் பதிவு செய்யக்கூடாது, நேரில் வந்து பணம் செலுத்தி விட்டு தான் நீங்கள் பத்திரங்களை பெற்றுச் செல்ல வேண்டும் என்று புதிய சட்டங்களை இவர் பொது மக்களுக்கு சொல்லிய வண்ணம் உள்ளார் என்ற ஒரு குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் தனது இருக்கையில் அமராமல் ஆங்காங்கே சென்று அமர்ந்து கொண்டு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டும் நீண்ட காலமாக இவர் மீது இருந்து கொண்டுள்ளது. குறிப்பாக இவர் யாரை பார்த்து என்ன சொல்வது என்று தெரியாமல் நீ எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் கூறிக்கொள். என்னை எவனாலும் மாற்ற முடியாது . எனானை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று சொல்வதோடு நான் எங்கு சென்றாலும் சார் பதிவாளர்தான் என்று மார்தட்டிக் கொள்கிறார், கொக்கரிக்கிறார் இந்த ஆம்பூர் சார் பதிவாளர் என்று சொன்னால் அது மிகையாகாது. இவ்வளவு தெனாவெட்டு இவருக்கு எங்கிருந்து வந்தது. இவருக்கு பின்புலமாக பக்க பலமாக இருப்பவர்கள் யார்?யார்? என்றும் தெரியவில்லை. இதுநாள் வரை இவரது ஆட்டம் ஆம்பூரில் கொடி கட்டி பறந்து வருகிறது. இவருக்கு நிரந்தரமான முடிவை தவெக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு எடுக்குமா? பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Leave a Reply