காட்பாடி 1வது மண்டலத்தில் தெரு நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி!

வேலூர்,அக். 8-
வேலூர் மாநகராட்சி 1 வது மண்டலத்தில் ஆணையர் கேத்தரின் சரண்யா உத்தரவின் பேரில் வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.
காட்பாடி 1வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் தலைமையில், மண்டலம் ஒன்றில் 15 வார்டுகளில் தொடர்ந்து 4192 சமுதாய நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.
மேலும் இன்று முதல் சமுதாய நாய்களின் இனவிருத்தியை கட்டுப்படுத்த சமுதாய நாய்களைப் பிடித்து ABC அறுவை சிகிச்சை மூலம் இனவிருத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியின்போது துப்புரவு ஆய்வாளர் அருண்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் முருகேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர். காட்பாடி 1வது மண்டலத்தில் பம்பரமாக சுழன்று வேலை செய்து வருகிறார் சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் என்று சொன்னால் அது மிகையாகாது.0 இந்த பணி அல்ல, எந்த பணியாக இருந்தாலும் வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் 1வது மண்டலம் மிகச் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.