வேலூர், அக். 10-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, திருமலைக்கோடி, ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம்-குழும, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 125 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றதைக் கொண்டாடும் சிறப்பு விழா, அக்டோபர் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீ நாராயணி மஹாலில் நடைபெற்றது. ஸ்ரீ சக்தி அம்மாவின் அருளாசியுடன் நடைபெற்ற இவ்விழாவுக்கு, ஸ்ரீ நாராயணி குழும நிறுவனங்களின் இயக்குநரும், அறங்காவலருமான பேராசிரியர் என். பாலாஜி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வேலூர் மாநகராட்சி ஆணையர் கி.கேத்தரின் சரண்யா, விழாவைத் தொடங்கி வைத்தார். ஸ்ரீ நாராயணி குழும நிறுவனங்களின் இணை இயக்குநர்கள் நிறைவு, பாலாஜி, ஸ்ரீகாந்த் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் கீதா இனியன், நிர்வாக அலுவலர் டாக்டர் மாதவி, சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் கார்த்திகேயன், சிவானந்தம், மனீஷ், சிறுநீரக மருத்துவ நிபுணர்கள் டாக்டர்கள் எழில்நிலவன், தேவா, வெங்கட்ராமணன் மற்றும் மயக்கவியல் நிபுணர் டாக்டர் கிருஷ்ணன், மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி குழும அலுவலர்கள் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சேவையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய மருத்துவர்கள், சிகிச்சை பெற்று நலமடைந்த பயனாளிகள் மற்றும் சிறுநீரக தானம் வழங்கிய கொடையாளர்கள் ஆகியோருக்குப் பாராட்டு தெரிவித்து கௌரவிக்கப்பட்டது. அவர்களின் அர்ப்பணிப்பு, மனிதநேயம் மற்றும் தன்னலமற்ற சேவையைப் போற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.











Leave a Reply