வேலூர், அக். 13-
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் மண்டபத்தில் (ஜே.பி.எம். மகாலில்) பிரதம மந்திரி சூரிய சக்தி திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்முகாமில் மின்வாரிய தலைமைப் பொறியாளர் ஜெயினுலாபுதீன், மேற்பார்வைப் பொறியாளர் மயில்வாகணன், செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ், மின்சார துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










Leave a Reply