வேலூரில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் !

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே, வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிப்பூர் எம்.பி.,அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் மாணவிகளிடம்
பாலியல் வன்கொடுமையாக நடந்து கொண்டதாக தெரிவித்து அதனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில், மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பாஜக கொடியை மற்றும் பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட வழக்கறிஞர் மணி தலைவர் நாகராஜ், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.