வேலூர், அக்.17-
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்(TNGCTA) வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி சார்பாக 15.10.2026 அன்று பிற்பகல் 1:30 மணிக்கு நுழைவு வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் TAPS குறித்து நிதித்துறை வெளியிட்ட கடிதத்தைத் திரும்பப் பெறவும், TAPS க்கான முழு விதிகளையும் உடனே வெளியிடவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இப்போராட்டத்திற்கு பேராசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பேராசிரியர் சுரேஷ் சிறப்புரையாற்றினார். மேலும், மண்டல துணைத்தலைவர் பேராசிரியர் திருஞானசம்பந்தம் மற்றும் கிளைச் செயலாளர்
தி. கணேஷ் ஆகியோர் நுழைவு வாயில் முழக்க ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தனர்.











Leave a Reply