வேலூர், அக்.17-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி, பேரணாம்பட்டு தாலுகா, சாத்கர் ஊராட்சியில் உள்ள தனியார் ஸ்டார் கன்வென்ஷன் ஹாலில், அரசின் சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பூ, பழம், மஞ்சள், குங்குமம் கொண்ட சீர்வரிசைகள் வழங்கப்பட்டு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் க. சிந்து (குடியாத்தம்), டாக்டர் ம. சுதாகர் (காட்பாடி), வினோத் கண்ணன் (வேலூர்), குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் க. செந்தில்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் அலுவலர் சுமதி, பேரணாம்பட்டு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தனலட்சுமி, நகர்மன்றத் தலைவர் பிரேமா வெற்றிவேல், துணைத்தலைவர் ஆலியார் ஜூபேர் அஹ்மத், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் மு.அ. ஷமீம் ரிஹானா, அரசு துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் ,மக்கள் பிரதிநிதிகள், கர்ப்பிணி தாய்மார்களின் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.











Leave a Reply